பொலீஸார் யாரிடமும் மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லை

  • லங்காதீப – தமிழாக்கம் : எம்.ஐ.அப்துல் நஸார்

poojitha jayasundaraகொழும்பு: சிறுமி சேயா சதெவ்மி கொலை சம்பந்தமாக முன்னர் சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட கைதானது சம்பவம் நடைபெற்ற இடம், சூழல், வீடுகளில் காணக்கூடியதாக இருந்த மற்றும் கேட்கக் கூடியதாக இருந்த தகவல்களின் அடிப்படையில் எழுந்த நியாயமான சந்தேகத்தின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பொலீஸாரின் செயற்பாடு மக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டதே தவிர யாருக்கும் தொந்தரவு செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டதல்ல, அவ்வாறு செயற்பட வேண்டிய அவசியமும் அதிகாரிகளுக்கு இல்லை எனவும் பிரதிப் பொலீஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் பொலீஸார் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் பொலீஸார் யாரிடமும் மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லை எனவும் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

இதனிடையே தனது மகன் குறித்த சம்பவம் நடைபெற்ற தினத்தன்று தன்னுடனேயே வீட்டில் இருந்ததாக பொலீஸாரிடம் கூறிய போதிலும் அதனை கருத்திலெடுக்காது எனது மகனை கைது செய்து அவனது வாழ்க்கையை சீரழித்தமைக்கு பொலீஸாரே பொறுப்புக் கூறவேண்டும் என இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 வயதான பாடசாலை மாணவனின் தாய் தெரிவித்துள்ளார்

Published by

Leave a comment