உவைசின் மனைவி ருஸ்தாவை திருமணம் செய்ய நான் தயார்: அசாத் சாலி

asadகொழும்பு: உவைசின் மனைவி என்னை திருமணம் செய்ய விரும்பினால் நானும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவிப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட சந்தர்ப்பத்திலே இதனை தெரிவித்துள்ளார். மத்­திய மாகாண சபையின் உறுப்­பினர் எ.எல்.எம். உவைஸின் மனைவி ருஸ்தாவை மத்­திய மாகாண சபையின் உறுப்­பினரும், தேசிய ஐக்­கிய முன்னணியின் தலை­வ­ரு­மான அசாத் ­சாலி அழைத்துச் சென்று வாழ்க்கை நடாத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இக்குற்றசாட்டினை முற்றிலும் அசாத் சாலி மறுத்துள்ளார். மதவிதிப் பிரகாரம் மூன்று அல்லது நான்கு திருமணங்களை நான் முடிக்கலாம். நான் யாரையும் கடத்தி வைத்திருக்கவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

உவைசின் மனைவி காவல் நிலையம் சென்று தன்னை யாரும் பலவந்தப்படுத்தவில்லை, தன்னுடைய முடிவின் பிரகாரம் நான் செயற்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார். ஆகவே அப்பெண்ணின் விருப்பத்துடன் அவருடன் வாழ நான் ஆசைப்படுவதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Published by

Leave a comment