மக்கா: கடந்த காலங்களைவிடவும் இம்முறை ஹஜ் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் எங்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாதநிலையை விடவும், ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறது சவுதி அரசாங்கம். ஓர் ஹஜ்ஜிற்கான ஏற்பாடுகள் குறைந்தது 10 மாதங்களுக்கு முன்னர் இருந்தே மிக நுணுக்கமாக சவுதி அரசாங்கம் திட்டமிட்டு வடிவமைக்கின்றது.
பல பில்லியன் றியாழ்களை ஹாஜிகளின் வருமானங்களின்றி தனது சொந்த நிதியில் சவுதி வாரி இறைக்கிறது. உலகில் எந்த நாடும், எந்த நகரமும் எந்த அரசாங்கமும் செலவிட முடியாத பணத்தை அள்ளி வீசுகிறது சவுதி அரேபியா.
ஹாஜிகளுக்கான போக்குவரத்துக்கள், வீசா நடைமுறைகள், விமானநிலைய வசதிகள், பாதுகாப்பு, மருத்துவம், மின்சாரம், உணவு மற்றும் தங்குமிடம் போன்ற அத்தியவசிய ஹாஜிகளின் தேவைகளை ஒன்றன் பின் ஒன்றாக ஆராய்ந்து செயற்படுத்தி வருகிறது.
ஹஜ்ஜில் ஏற்படும் மினா சன நெரிசல் பாதுகாப்பு ஒழுங்குகள் மிக நுணுக்கமாகவே செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் மேலதிகமாக ஜம்ரா கல்லெறியும் பாதைகளும், பாலங்களும் விசேடமாகவே அமைக்கப்படுகின்றன. முஸ்தலிபாவில் இருந்து மினா-ஜம்றாவுக்கு செல்லும் பாதைகளும், பாலங்களும் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறைந்தது 5 கி.மீ. தூரத்திற்கு அப்பால் இருந்தே பாதுகாப்பான அறிவுறுத்தல்கள் ஹாஜிகளுக்கு வழங்கப்படுகின்றன.
பல மொழிகளிலும் அறிவுப்புச் செய்யப்படுகின்றன. மெதுமெதுவாக தங்களது பாதையிலேயே முன்னோக்கி வரும்படியும், வயோதிபர்கள் மற்றும் பெண்களைக் கருத்திற்கொண்டு அவசரப்படாமல் பிறரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் பொறுமையாக ஜம்றாவுக்கு வரும்படியும் ஹாஜிகள் குறித்த இடங்களில் அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஆனால், திமிர்பிடித்த பல சாலிகள் போன்ற உடற்கட்டமைப்பைக்கொண்ட குழுவினர், இவ்வறிவித்தல்களை செவிமடுக்காமல், பெருமிதமாக அவசரமாக முன்டியடித்துக்கொண்டு முன்னேறும்போதுதான் ஒரு பகுதியில் இருந்து மற்றுமொரு பகுதிக்கு ஹாஜிகள் இழுத்துச் செல்லப்பட்டு, கீழே வீழ்த்தப்படுகின்றனர்.
இதன்போது, உடலோடு உடல் மோதி, மிதியுண்டு, கீழே விழுந்தவர்களைத் தூக்குவதற்கு முறசிப்பவர்களும் இந்த அவரசக் குழு ஹாஜிகளால் மிதிபட்டு இறைபூமியில் பரிதாபகமாகப் பலியாகின்றனர்.mj
இஹ்ராம் கட்டிக்கொண்டு, அறிவுறுத்தல்களையும், பொறுமையையும் கடைப்படிக்கத் தெரியாத இத்தகைய நபர்களால் சன நெரிசல் விபத்துக்கள் இவ்வாறே ஏற்படுகின்றன. வீழ்ந்துகிடக்கும் 700 ஜனாஸாவிலும் இந்தச் உயிர் விபத்து சம்பவத்திற்கு காரணமான எவரும் இருந்திருக்க வாய்ப்பில்லை. (அல்லாஹ் அறிந்தவன்).
எனவே ஹஜ்ஜிற்கு செல்லும் ஹாஜிகளுக்கு ஒழுக்கத்தை முதலில் முகவர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆயிரம் அல்ல பத்தாயிரம் ஜனாஸாக்கள் ஒரே நேரத்தில் வீழ்ந்தாலும், அடுத்த சில மணி நேரத்திற்குள் அத்தனை ஜனாஸாக்களையும் குளிப்பாட்டி கபனிட்டு அடக்கக்கூடிய அத்தனை வசதிகளையும் சவுதி அரசு செய்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டே வைத்திருக்கின்றன.
மக்காவில் காயப்படுபவர்களை மக்கா எல்லைக்குள் வைத்தே குணப்படுத்தும் மகத்துவமான மருத்துவ வசதிகளை சவுதி ஏற்பாடு செய்திருக்கிறது. ஆயிரக்கணக்கான வைத்தியர்களும், தாதியர்களும், நூற்றுக்கணக்கான அம்பியுலன்ஸ் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
ஹஜ்ஜின்போது யாரிடமும் கையேந்தாமல் தனது சொந்த நிதியில் சவுதி ஹாஜிகளுக்கான அத்தனை தேவைகளையும் செய்கிறது.
புனித இடங்களில் மிளிரும் சக்திவாய்ந்த மினவிளக்குகளில் ஒன்றாவது உலகப் புகழ்பெற்ற எந்தவொரு நகரத்திலும் இருக்க முடியாத அளவுக்கு தனது சேவையை சவுதி செய்கிறது.
ஸம் ஸம் உட்பட பல பில்லியன் தன்னீர் போத்தல்களும், குளிர்பாணங்களும், யோகட் மற்றும் பிர உணவுகளும், பாய், கூடாரங்கள், குடைகள், பொட்டலப் பைகள், பிளாஸ்ரிக் குவளைகள் என வாரி இறைக்கிறது. இதைவிட பொதுமக்களும் ஹாஜிகளை அல்லாஹ்வின் விருந்தாளிகளாக மதித்து உதவி புரிகின்றனர்.நிமிடத்துக்கு நிமிடம் புனித இரு ஆலயங்களும், அதன் சுற்றுப்புற வீதிகளும் துப்பரவு செய்யப்படுகின்றன. நீர் இல்லாத பாலைவனத்தில் 2 மில்லியன் ஹாஜிகளுக்கான குளிப்பு உட்பட அத்தியவசியத் தேவையை மேற்கொள்ள நீர் வசதிகளும், மலசல கூட வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
மினாவில் தீப் பிடிக்காத (fire proof) கூடாரங்கள் பல பில்லியன் றியாழ்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
2 மில்லியனுக்கும் அதிகமான வௌ;வேறுபட்ட இன,மொழி, கலாசார, குணாதிசயங்கள் மற்றும் கொள்கைகளைக் கொண்டவர்கள் குறிப்பிட்ட தினங்களில் ஓர் இடத்தில் ஒன்று சேர்வதால் ஏற்படும் விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை.
இருந்தும் இவ்வளவு செலவு செய்தும், திட்டமிட்டும் விபத்துக்கள் மனித கவனயீனத்தால் ஏற்படுகிறது. இவ்வருட ஹஜ்ஜில் ஏற்பட்ட உயிரிழப்பு அசம்பாவிதங்கள் என்றுமில்லாத அளவுக்கு சவுதி அரசாங்கத்தை சோகத்துக்குள் ஆழ்த்தியிருக்கின்றது. இருந்தும் மரணித்தவர்கள், காயப்பட்டவர்களுக்கு கோடிக்கணக்கான றியாழ்களை வழங்கி, தாங்கள் தவறு செய்திருப்பின் எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள் என விருந்தாளிகளை கண்ணியப்படுத்தி வழியனுப்ப காத்திருக்கிறது சவுதி அரசாங்கம்.
இந்த ஹஜ் ஏற்பாடுகளைச் செய்வதற்கு அல்லாஹ் சவுதிக்குத்தான் நாடி இருக்கிறான். சவுதியைவிட வேறு யாரால்தான் இந்த ஹஜ் ஒழுங்கை ஏற்படுத்த முடியும்..?
மரணித்தவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ளட்டும்.விபத்தும், மரணமும் அல்லாஹ்வின் நாட்டம். எழுதி இருப்பது நடந்தே தீரும்.
எவர் எவ்வாறு விமர்சித்தாலும் உலகம் அழியும்வரை ஹஜ் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாகவே இடம்பெறும்.MJ
Published by


Leave a comment