கொழும்பு: ஸ்ரீலங்கா அமரபுர மகா சங்க சபையின் அதிசங்கைக்குரிய மகா நாயக்க தவுல்தென ஞானிஸ்ர தேரரின் நூறாவது ஜனன தின விழா வெள்ளி காலை நடைபெற்றது. நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் சமகால அரசியல் எதிரிகளாக மாறியுள்ள ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நீண்டகால நாட்களுக்குப் பின்னர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இதன்போது ராஜபக்ஷ குடும்பத்தை கடுமையாக விமர்சிக்கும் அமைச்சர் ராஜித சேனாரட்னவும் உடனிருந்தார்.

Leave a comment