பேரினவாதத்தின் மற்றுமொரு உதயம் “சிங்ஹலே”

  • AK-48

sihaleகொழும்பு: நேற்றிரவு நுகேகொடையில் முஸ்லிம்களின் வீட்டின் மதில்களிலும், வீட்டுக்கதவுகளிலும் “சிங்ஹலே” எனும் சொல் எழுதப்பட்டதானது, இலங்கையில் மீண்டும் பேரினவாதம் தலைதூக்கப்படுவதை எமக்கு எச்சரிக்கையாக விடப்பட்டிருக்கிறது.

“சிங்ஹலே” எனும் பௌத்த பேரினவாத அமைப்பு, முதன் முதலில் முகநூலில் உதயமானது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், பேரினவாத பௌத்த அமைப்பான பொதுபலசேனாவும் இதன் பின்னணியில் செயற்படுவதாக தற்பொழுது தெரியவந்துள்ளது.

பிரபல முஸ்லிம் வர்த்தகர்களையும் முஸ்லிம்களின் வரத்தக நிலையங்களையும் கொண்டமைந்த, அழுத்கமை போன்றே முஸ்லிம் வர்த்தகப் பின்னணிகளைக் கொண்ட நுகேகொடையில் நேற்றிரவு இவ்வாறான துவேசத்தைத் தூண்டும் நடவடிக்கைகள் தூண்டிவிடப்பட்டிருக்கின்றன.

sihale

ஆரம்பத்தில் முகநூல் கருத்துக்களில் ஆரம்பித்து, முச்சக்கரவண்டிகளில் விளம்பரம் போன்று எழுதப்பட்டுவந்த “சிங்ஹலே”, தற்பொழுது மைகொண்டெழுதும் கை எழுத்துருவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

“பொதுபலசேனாவுக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” என்றே கடந்த 5 வருடங்களை ஓட்டி, படுதோல்வியடைந்த மகிந்த கம்பனியின் மற்றுமொரு உதயமே இந்த “சிங்ஹலே” எனும் அமைப்பாகும்.

“சிங்ஹலேக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” என்று பெரும்பான்மையின அரசியல்வாதிகள் விலகிக்கொண்டாலும், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் அமைப்புக்களும் இவ்விடயத்தில் அதிகூடிய அக்கறை செலுத்துமாரும் கேட்கின்றோம்.

Published by

Leave a comment