Author: yourkattankudy.com
-
உத்தியோகபூர்வ வாகனங்கள்- இல்லங்களை ஒப்படைக்க கோரிக்கை!
கொழும்பு: வடக்கு- வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள்- இல்லங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண பிரதம செயலாளரிடம் அவற்றை ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகத்தின் பிரதி ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
-
பாக். சிறையில் தாலிபான்கள் தாக்குதல்; கைதிகள் தப்பியோட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் அந்நாட்டின் தாலிபான்கள் திட்டமிட்டு ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தியதில் அச்சிறையில் இருந்தவர்கள் சுமார் 250 பேர் தப்பித்துள்ளனர். தப்பித்தவர்களில் சுமார் முப்பது பேர் கடும்போக்கு ஆயுததாரிகள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
‘வடமாகாண முஸ்லிம்களின் நலன் குறித்தே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக வெளியிட்டுள்ள அறிக்கை வெகுளித்தனமானது’
மன்னார்: ‘வடமாகாண முஸ்லிம்களின் நலன் குறித்தே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக வெளியிட்டுள்ள அறிக்கை வெகுளித்தனமானது’ என்று வவுனியா மாவட்ட இன நல்லறவுக்கான ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி தெரிவித்துள்ளார்.
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான கடமை முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான கடமை முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.வாசுதேவனும் கலந்து கொண்டார்.
-
கெவிலியாமடு கிராமத்தில் அத்துமீறி குடியேறியுள்ள அம்பாறை மாவட்டத்தவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு த.தே.கூ. மட்டு-நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கோரிக்கை
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கெவிலியாமடு கிராமத்தில் அத்துமீறி குடியேறியுள்ள அம்பாறை மாவட்டத்தவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு த.தே.கூ. மட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
-
‘போட்டிகளில் அடித்தே ஆடவேண்டும்’ : டில்சான்
கொழும்பு: ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப துடுப்பாட்ட வீரர்கள் மாற்றத்தினை வெளிப்படுத்த வேண்டுமென இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார். 4 களத்தடுப்பாளர்கள் மாத்திரம் களத்தடுப்பில் ஈடுபடும் போது, பந்து பழையதாக இருக்கும் பட்சத்தில் இறுதி ஓவர்களில் அதிரடியை வெளிப்படுத்த முடியுமென டில்ஷான் தெரிவித்தார்.
-
தமிழ் பெண்களை வர்ணிக்கும் அஸ்வர், முஸ்லிம் பெண்களின் பிரச்சினை பற்றி பேசுவாரா?
கொழும்பு: தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் ஆளும் தரப்பு எம்.பி அஸ்வர், பாரளுமன்றத்தில் ஆற்றிய உரையானது அருவருக்கத்தக்கதாகும். ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே அசௌகரியப்படுத்தும் செயலாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உதவி செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
-
பொதுநலவாய உச்சி மாநாடு:உள்நாட்டு, வெளிநாட்டு இளைஞர், யுவதிகள் 138 பேர் பங்கேற்பு
கொழும்பு: இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் இளைஞர் பேரவையில் (Youth Forum) உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 138 இளைஞர், யுவதிகள் பங்குபற்றவிருப்பதாக இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்தது.
-
‘கிழக்கு மாகாணம் இன,மத ஐக்கியத்தில் முன்னுதாரனமிக்க மாகாணமாக திகழ வேண்டும்’ : மட்டு பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கையில் கிழக்கு மாகாணம் இன ஐக்கியத்தில் முன்னுதாரனமிக்க மாகாணமாக திகழ வேண்டுமென மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரியின் புதிய பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார். ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு ஜூம்மா பள்ளிவாயலான
-
மத்தியகிழக்கு எரி பொருளிலேயே பொது பல சேனா சொகுசு கார்களில் பயணிக்கின்றது: டிலான்
கொழும்பு: முஸ்லிம் நாடுகளிலிருந்து எமக்கு கிடைக்கும் கனிய எண்ணெயினூடாகவே பொது பல சேனா அமைப்பினர் சொகுசு கார்களில் பயணிக்கின்றனர். அந்த பெட்ரோல் ஹலாலா என அவர்கள் பார்க்கவில்லை. முடிந்தால் மத்தியகிழக்கு எரிபொருளை பயன்படுத்தாது அவர்கள் நடந்து செல்லட்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலநோம்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
-
தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு இப்தார் நிகழ்வு சிகரம் ஜூம்மா பள்ளிவாயலில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு ஜூம்மா பள்ளிவாயலான சிகரம் முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சுமார் 100 பெரும்பளான தமிழ் மக்களுடன் சுமார் 75 முஸ்லிம் மக்களும் இணைந்து கலந்து கொண்ட தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு பேணும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை சிகரம் முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
தமிழ்-முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பகங்கேற்ற இப்தார் நிகழ்வு காத்தான்குடியில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி றிஸாலா எப்.எம். மீடியா வேல்ட்டும் காத்தான்குடி முஸ்லிம் மீடியா போரமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 28-07-2013 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரை மீனவர் கட்டிட மண்டபத்தில் காத்தான்குடி றிஸாலா எப்.எம். மீடியா வேல்டின் நிறுவனத்தின் பணிப்பாளர் கபீர் எம் ஹஸன் தலைமையில் இடம்பெற்றது.