– பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு ஜூம்மா பள்ளிவாயலான சிகரம் முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சுமார் 100 பெரும்பளான தமிழ் மக்களுடன் சுமார் 75 முஸ்லிம் மக்களும் இணைந்து கலந்து கொண்ட தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு பேணும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை சிகரம் முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
சிகரம் முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் எம்.வை.ஆதம் தலைமையில் இடம்பெற்ற இவ் இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீஎம். ஹாலித் ஜேபி, மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்வியற்கல்லூரியின் புதிய பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன், மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் வாசுகி அருல்ராஜா, மண்முனை பற்று ஆரையப்தி பிரதேச சபை செயலாளர் மற்றும் கிராம உத்தியோக்தர்கள், கோயில் தர்மகர்தாக்கள், அப்பிரதேச அரச திணைக்கங்களில் கடமை புரியும் அரச உத்தியோகத்தர்கள் உலமாக்கள்ட, ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள ஊர் பிரமுகர்கள் பிரதேச அரசியல் வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வில் விஷேட மார்க்க சொற்பொழிவுகளை சிகரம் முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி ஏ.எல்.சுல்தான் ஹாபிஸ் (மதனி) மற்றும் காத்தான்குடி சபீலுர் றஸாத் அறபுக்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எம்.ஸாஜித் அலி தப்லீஹி (முப்தி) ஆகியோர்கள் நிகழ்த்தினார்கள்.
மார்க்க சொற்பொழிவு நிகழ்வைத் தொடர்ந்து தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு தொடர்பாக மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்வியற்கல்லூரியின் புதிய பீடாதிபதி எஸ்.ராஜேந்திரனினால் விஷேட உரை ஒன்றும் நிகழ்தப்பட்டது.
இவ் தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வில் சுமார் 100 தமிழ் சகோதரர்களும் 75 முஸ்லிம்களும் கலந்து கொண்டதாகவும் இவ்வாறான நிகழ்வுகளின் மூலம் இன நல்லுறவு வளக்கப்படுவதால்தான் வருடா வருடம் இவ் இப்தார் நிகழ்வை நடத்துவதாகவும் பள்ளிவாயல் தலைவர் எம்.வை.ஆதம் தெரிவித்தார்.
Leave a comment