உத்தியோகபூர்வ வாகனங்கள்- இல்லங்களை ஒப்படைக்க கோரிக்கை!

electionகொழும்பு: வடக்கு- வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் அமைச்சர்கள்  மற்றும் முதலமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள்- இல்லங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண பிரதம செயலாளரிடம் அவற்றை ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகத்தின் பிரதி ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அவை ஒப்படைக்கப்பட வேண்டுமென தேர்தல்கள் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலில் முன்னாள் மாகாண அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களின் உத்தியோகபூர்வ வாகனங்கள்- இல்லங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் என்பன தவறுதலாக பயன்படுத்தப்படக் கூடுமென தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமையவே இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

Published by

Leave a comment