– பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான கடமை முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.வாசுதேவனும் கலந்து கொண்டார்.
இதன் போது, மாவட்டத்தில் அமைச்சுக்களின் கீழ் இணைக்கப்பட்டு வெளிக்கள உத்தியோகத்தர்களாகச் செயற்பட்டுவரும் ஒவ்வொரு பிரிவினரதும் செயற்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இதில், காணி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், சிறுவர் தொடர்பாக செயற்படுவோர், விளையாட்டுத்துறை, முதியோர் உரிமைகள், மொழிகள் தொடர்பான பிரிவு, திறன் அபிவிருத்தி, மனித வள அபிவிருத்தி, பெண்கள் அபிவிருத்தி, நிவாரண சகோதரிகள், கிரம அபிவிருத்தி என அனைத்துப்பிரிவுகளையும் சேர்ந்த வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



Leave a comment