தமிழ்-முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பகங்கேற்ற இப்தார் நிகழ்வு காத்தான்குடியில்

DSC00159– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி றிஸாலா எப்.எம். மீடியா வேல்ட்டும் காத்தான்குடி முஸ்லிம் மீடியா போரமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 28-07-2013 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரை மீனவர் கட்டிட மண்டபத்தில் காத்தான்குடி றிஸாலா எப்.எம். மீடியா வேல்டின் நிறுவனத்தின் பணிப்பாளர் கபீர் எம் ஹஸன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் இப்தார் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்-முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ,விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர், ஊடகவியலாளர் எம்.பி.எம். பைரூஸ் மற்றும்  காத்தான்குடி முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன், மற்றும் ஊடகவியலாளர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிகள் இணையத்தள செய்தியாளர்கள் ,றிஸாலா எப்.எம். வானொலி அறிவிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு இடம்பெற்ற இவ் இப்தார் நிகழ்வில் மாரக்க சொற்பொழிவை காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் பஷீர் (மதனி) நிகழ்த்தினார்.

bazeer madani

DSC00159

DSC00164

DSC00167

Published by

Leave a comment