Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பொதுநலவாய பிரதிநிதிகள் இன்று மட்டக்களப்பு விஜயம்

    மட்டக்களப்பு: பொதுநலவாய மாநாட்டு பிரதிநிதிகளில் ஒரு குழுவினர் இன்று புதன்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசேட விமானம் மூலம் மட்டக்களப்பு விமான நிலையத்தை வந்தடையும் குழுவினர் அங்கு வரவேற்கப்பட்டு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள முதியோர் பூங்காவுக்கு அழைத்து வரப்படுவர்.

  • நாளை முதல் 19ஆம் திகதி வரை அரசாங்க கட்டிடங்களில் தேசிய கொடியை பறக்கவிட அரசாங்கம் வேண்டுகோள்

    கொழும்பு: இலங்கையில் நடைபெறும் 23 ஆவது பொதுநல வாய அரச தலைவர்கள் மாநாட்டையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி ஏற்பின் 4 ஆவது வருட நிறைவு விழாவையும் முன்னிட்டு நாளை (14) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாடு பூராவுமுள்ள சகல அரச நிறுவனங்களின் கட்டிடங்களில் தேசிய கொடியேற்றுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரியுள்ளது.

  • பொதுநலவாய சாசனம் மகாராணியின் கையெழுத்துடன் நேற்று வெளியீடு

    கொழும்பு: 2013ம் ஆண்டுக்கான பொது நலவாய சாசனம் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது. பொதுநலவாய அமைப்பின் கெளரவ தலைவி இரண்டாவது எலிசபெத் மகாராணியின் கையொப்பத்துடன் இந்த அதிகாரபூர்வ பத்திரம் நேற்று வெளியிடப்பட்டது.

  • எழுதுகோல்….!

    – காத்தான்குடி முபா பேனாவுக்கு உயிர் உண்டு என்கிறேன் நான்… பேனா… உலகின் அபார கண்டுபிடிப்பு… இறைவனின் அருட்கொடை…

  • கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய நபரை நாடு கடத்த பிரிட்டன் நடவடிக்கை

    லண்டன்: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று  நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

  • இரத்தினக் கல் கண்காட்சி நாளை ஆரம்பம்

    கொழும்பு: பொது நலவாய அரச தலைவர்களின் மாநாட்டுக்கு இணைவாக இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகைகளின் கண்காட்சி யொன்று நாளை 13 ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெறும்.

  • கென்னடியின் உயிரைக் குடித்த விசித்திரமான மர்ம ‘தோட்டா’: வெளிவராத புதிய தகவல்கள்

    – SHM நியூயோர்க்:  சுடப்பட்ட கென்னடிக்கு சிகிச்சை அளித்த தாதிகளில் ஒருவர்,  கென்னடியின் மரணம் குறித்தான புதிய தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அதில் கென்னடியின் கழுத்தில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று மிகவும் விசித்திரமாக இருந்ததாக புதிய தகவலை தெரிவித்துள்ளார் அவர்.

  • காமன்வெல்த் மாநாடு: மொரிஷியஸ் பிரதமர் செல்லமாட்டார்

    லண்டன்: இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் செல்லமாட்டார் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. இலங்கை, மனித உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று பிரதமர் ராம்கூலம் மொரிஷியஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

  • மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் 2013 வருடாந்த பரிசளிப்பு விழா

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் 2013ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை சுவாமிநடராஜனந்தா ஞாபகார்த்த மண்டபத்தில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் கே.மனோராஜ் தலைமையில் நடைபெற்றது.

  • அந் நஜாத் பாலர் பாடசாலை விளையாட்டு போட்டி

    – ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா கலந்து கொண்ட அந் நஜாத் பாலர் பாடசாலை சின்னஞ் சிறார்களின் விளையாட்டுப் போட்டி நேற்று கச்சக்கொடுத்தீவு அந் நஜாத் பாலர் பாடசாலையில் கோலாகலமாக நடைபெற்றது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

  • கிண்ணியா நகரசபையின் விடுதிக் கட்டடத்திற்கான தடையும் ஒரு மாதத்திற்குள் முதலமைச்சரினால் இன்னுமொரு கட்டடம் கட்டுவதற்கான உறுதி மொழியும்

    – ராசி கிண்ணியா: கிண்ணியா நகரசபையின் அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றான டெலிகொம் அருகிலுள்ள காணியில் விருந்தினர் விடுதி அமைக்கும் திட்டமானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகும திட்டத்தினூடாக மக்களின் பங்களிப்புடன் நகரசபையினால் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டு 2013.10.30 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.

  • நாளையும் நாளை மறுநாளும் வாகன நெரிசல் ஏற்படும் சாத்தியக்கூறு

    கொழும்பு: நாளையும் (13) நாளை மறுதினமும் (14) வாகன நெரிசல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பெரும்பாலான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நாளையும் நாளை மறுதினமும் இலங்கை வரவிருப்பதால் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

←Previous Page
1 … 887 888 889 890 891 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar