கிண்ணியா நகரசபையின் விடுதிக் கட்டடத்திற்கான தடையும் ஒரு மாதத்திற்குள் முதலமைச்சரினால் இன்னுமொரு கட்டடம் கட்டுவதற்கான உறுதி மொழியும்

Chairman,voic chairman[1]ராசி

கிண்ணியா: கிண்ணியா நகரசபையின் அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றான டெலிகொம் அருகிலுள்ள காணியில் விருந்தினர் விடுதி அமைக்கும் திட்டமானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகும திட்டத்தினூடாக மக்களின் பங்களிப்புடன் நகரசபையினால் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டு 2013.10.30 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டமானது நகரசபையின் மூலமாக தூரநோக்கு சிந்தனையுடன் செய்யப்பட்ட ஒரு திட்டமாகும். சமகாலத்தில் கைவிடப்பட்டு காணப்படுகின்ற வெற்றுக் காணிகள் குறிப்பிட்ட இடத்தில் வாழும் சமூகத்தின் அபிலாசைகளுக்கும், எண்ணங்களுக்கும் எதிராக பலாத்காரமாக சுவீகரிக்கும் சமூகத்தின் விருப்பங்களை நிறைவேற்று முகமாக பயன்படுத்தப்படுவது யாவரும் அறிந்த உண்மையாகும். இந்த விருந்தினர் விடுதி அமைப்பதற்குரிய காரணியும் இந்த வகைக்குள் அடங்கும் ஒன்றாகும். எதிர்காலத்தில் வாழ்கின்ற கிண்ணியா வாழ் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமையப்போகின்ற ஒரு வெற்றுக் காணி என்பதை முன்னைய அரசியல் வாதிகள் எவரும் உணராத நிலையில் கிண்ணியா நகரசபையானது உலமா சபை உட்பட ஊரின் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடி தூரநோக்கு சிந்தனையாக உதித்ததே இந்த விருந்தினர் விடுதியாகும்.

இந்த விருந்தினர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட காணியானது எதிர்காலத்தில் பல சவால்களை எதிர்நோக்கக் கூடிய காணி என்பதால் கிண்ணியா நகரசபையானது கல்நாட்டு விழாவை அரசியல்வாதிகளைக் கொண்டு பெரிதாக செய்ய முற்படாதது ஒரு தீர்க்கதரிசனமானதாகும். எனவேதான் வைபவத்தை அலட்டிக் கொள்ளாது நகரசபை தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள் உட்பட உலமாசபை தலைவர், தளவைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி போன்றோரினால் நடப்பட்டது. இது ஊரிலுள்ள பெரிய அரசியல் தலைமைகளை கொண்டு பேண்ட் வாத்தியம் அடித்து கும்மாளமடிக்கும் ஒரு நிகழ்வாக மாற்றி கூத்துக்காட்டும் ஒரு நிகழ்வாக கிண்ணியா நகரசபையின் தலைமையோ அல்லது உறுப்பினர்களோ நினைக்கவில்லை.

இந்த இடத்தில் குறித்த ஒரு கட்டடம் அமைக்கப்படுவதன் மூலமாக எதர்காலத்தில் வர இருக்கின்ற ஏனைய சமூகங்கள் எத்தனிக்கின்ற வேறு மத கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்டடங்கள் வருவதை தவிர்ப்பது ஒரு பிரதான நோக்காக இருந்தது. ஆத்துடன் பெறப்பட்ட நிதியானது விருந்தினர் விடுதி என்ற பெயர் சூட்டப்பட்டதனாலேயே வழங்கப்பட்டதாகும். இதன் மூலமாக வெளிநாட்டிலிருந்து ஊரின் நலவை நாடி சமூகத்திற்கு அபிவிருத்தி பணிகளையும், சேவைகளையும் செய்ய வருகின்றவர்கள் கிண்ணியா மண்ணாணது உபசரிப்பில் போற்றப்படுகின்ற ஒரு மண்ணாக இருந்தும் கூட அவர்களை முறையாக வரவேற்று பொருத்தமான ஒரு இடத்தில் தங்க வைப்பதற்குரிய எந்த வசதியும் கிண்ணியா மண்ணில் இல்லை. அதற்குரிய ஒரு முஸ்தீபாகவும் இதனை கருத முடியும்.

அதேபோன்று தொழில்சார்ந்த உயர் மட்டக்குழுக்கல் கிண்ணியாவில் முக்கிய கலந்துரையாடல்களை செய்வதற்குரிய ஒரு இடமாகவும் இது திட்டமிடப்பட்டதே தவிர இது கலாச்சார சீர்கேடுகளை உருவாக்கும் இடமாக எவரும் கருதவுமில்லை, எத்தனிக்கவுமில்லை இந்த குறிப்பிட்ட காணியானது துப்புரவு செய்யப்படும் போது பேய் வீடுபோல் காணப்பட்டது துப்புரவு செய்யப்படுகிறது என மக்கள் மிகவும் சந்தோசப்பட்டு தொலைபேசியூடாகவும், நேரடியாகவும் நகரசபைக்கு தமது சந்தோசங்களை வெளிப்படுத்தி பாராட்டுதல்களை தெரிவித்தனர்.

இதில் புதிய கட்டடம் ஒன்று ஒரு கோடியே 71 இலட்சம் ரூபா செல்வில் அமைக்கப்படவிருப்பதையிட்டு பெரிமிதம் அடைந்தனர். ஆனால் கட்டடம் அடிக்கல் நாட்டு வேலைகள் ஆரம்பமாகி 4 வது நாள் இந்தக் காணி பாடசாலைக்கு கையளிக்கப்படவிருப்பதாகவும் முதலமைச்சரவர்களுக்கு இந்த கட்டடம் அமைக்கப்படுவது விருப்பமில்லை எனவும் கூறி அதனை இடை நிறுத்துமாறு கிண்ணியா நகரசபை தவிசாளரிடம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் கூறப்பட்டதுடன் அதன் கட்டுமான பணிகளை இடைநிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் அன்றே தினம் கிண்ணியா பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் பிரதேச செயலாளருக்காக ஒப்பமிட்டு இந்த கட்டடத்தை உடன் நிறுத்துமாறும் நகரசபையின் செயலாளருக்கு கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

இதன் பிரதிகள் கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கும், பெரிய கிண்ணியா கிராம சேவை உத்தியோகத்தருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த இடைநிறுத்தலை சமூக தலைவர்களுக்கும் நகரசபையின் ஆலோசனை குழுவிற்கும் தெரியப்படுத்தும் முகமாகவும் இச்செயற்திட்டங்களை தொடர்ந்து செல்வதற்குரிய ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்காக கலந்துரையாடல் ஒன்று நகரசபை மண்டபத்தில் 2013.11.03 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது நகரசபை தவிசாளர் நடைபெற்ற விடயங்களை விளங்கப்படுத்தியதோடு பங்கேற்றவர்களுக்கு முதலமைச்சரை சந்தித்து இந்த குறித்த கட்டடத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி இதனை முன்கொண்டு செல்ல வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டு மறுநாள் கிண்ணியா மத்திய கல்லூரியில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது நகரசபை தவிசாளர் இந்த கட்டடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இது தூரநோக்குடன் செயற்பட்டு செய்யப்படுகின்ற ஒரு அபிவிருத்தித் திட்டம் என்பதால் தயவு செய்து இடைநிறுத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டார். அதேபோன்று வருகை தந்திருந்த கிண்ணியா உலமா சபை தலைவர், இணக்க சபையின் தலைவர் உட்பட பல முக்கியஸ்தர்களும் நிலைமையை தெளிவுபடுத்த எத்தனித்த போது முதலமைச்சர் அவர்களின் கருத்துக்களை சுதந்திரமாக சொல்ல விடாது தடை செய்தது அங்கிருந்தவர்கள் அனைவரும் அறிந்ததே. இதன் போது முதலமைச்சர்; கருத்து தெரிவிக்கும் போது தான்  பாடசாலைக்கு வழங்குவதற்காக இந்த பாழடைந்த கட்டடமுள்ள காணியை தான் நினைத்துக் கொண்டிருந்ததாகவும் அதனை பாடசாலைக்குத்தான் கட்டாயம் வழங்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

இதன் போது இவ்வாரான எண்ணம் ஏற்கனவே இருந்திருந்தால் ஏன் அதற்குரிய முன் நடவடிக்கைகளை முப்பது வருட காலமும் செய்யவில்லை. அத்துடன் ஏன் கிண்ணியா பிரதேச செயலாளரிடமிருந்து அந்த காணியை பாடசாலைக்கு பாராதீனப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை செய்யவில்லை என்று ஆலோசனைக் குழுவினர் கேட்டபோது எந்த வித பொருத்தமான பதிலும் அளிக்கப்படாது தனது எண்ணம் அவ்வாறுதான் இருந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இறுதியாக இந்த கட்டடத்தை கட்டி முடித்த பின்னர் முறையான படிமுறைகளினூடாக பாடசாலைக்க வழங்குவதற்கான விருப்பத்தை நகரசபை தவிசாளரும் ஆலோசனை குழுவினரும் கூறிய போதிலும் அவ்வாறு செய்யமுடியாது என்று முதலமைச்சர் தட்டிக் கழித்து விட்டார். பின்னர் அவர் ஒரு மாத காலத்திற்குள் தான் வேறு ஒரு கட்டடத்தை நகரசபையினால் பிரதேச செயலாளர் மூலமாக அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்ற கடிதத்தை பெற்று கட்டடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அந்தக் காணியில் தனது ஒதுக்கீட்டில் ஒரு மாத கால்த்திற்குள் புதியதொரு கட்டடத்தைக் கட்டி அதனை பாடசாலைக்கு கையளிப்பதற்கான உறுதி மொழியை நகரசபையின் ஆலோசனைக் குழுவிடம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். இருப்பினும் நகரசபையின் ஆலோசனை குழுவினரும் கிண்ணியா வாழ் மக்களும் அந்த காணியில் ஒரு மாத காலத்திற்குள் முதலமைச்சரினால் கட்டடம் ஒன்று அமைக்கப்படுவதை ஆவலுடனும் ஆசையுடனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றது. இந்த உள்ளூராடசி சபைகளில் தனது சொந்த பிரதேசமான கிண்ணியா சபைக்கு இப்பொழுதுதான் இவ்வாறான உதவிகளை செய்ய தொடங்கியுள்ளார் போலும்.

Published by

Leave a comment