-
அமெரிக்காவில் தஞ்சம் கோருவதற்கு தடை விதிக்கும் டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
வாஷிங்டன் DC: அமெரிக்காவின் தென்பகுதி வழியாக அகதிகளாக நுழைவோர் அந்நாட்டில் புகலிடம் கோருவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த தடையுத்தரவை விலக்கி சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க மனித உரிமை குழுக்களின் வாதங்களை கேட்ட சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜான் டிகர், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையுத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
-
இரண்டு மணி நேரம் இடம்பெற்ற சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது.
-
எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறாமல் பணியாற்றிய ஆளுநர்
அபுஜா: நைஜீரியாவின் தென் மேற்கில் உன்ள ஓஷுன் நாட்டின் ஆளுநர், தான் பணியில் இருந்த எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறவில்லை என்று கூறியுள்ளார். தற்போது அவர் பணியில் இருந்து விடைபெறும் நேரத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். ஓஷுன் ஆளுநர் ராவுஃப் அரெக்பெஸோலா ஒரு கூட்டத்தில் பேசும்போது, இந்த நாடு தனக்கு சாப்பாடு போட்டு, வாகனங்கள் அளித்து, தங்க இடமும் வழங்கியுள்ளதால், பணத் தேவை இருக்கவில்லை என்று தெரிவித்தார்.
-
சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு
பாராளுன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். நாளை (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
-
பாராளுமன்ற வரலாற்றில் கரி நாள் – ஹக்கீம்
இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் இன்றைய நாளே கரிநாள் என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (16) மீண்டும் இடம்பெற்ற மோதல்கள் குறித்து செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
-
மஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (15) பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் (14) மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவருக்கு எதிராக அமைந்ததையடுத்து அவர் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார்.
-
இலங்கையில் நீதி வென்றது !
கொழும்பு : அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 33ஆவது சரத்தின்படியே, நாடாளுமன்றத்தைக் கலைத்ததாகவும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இந்த சரத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்தார். எனவே, அரசியலமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக சட்டமா அதிபர் தெரிவித்தார். I
-
தேர்தல் வருகிறது
AK-11 காத்தான்குடி: “ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதமானது”, பிரதமராக மகிந்த ராஜபக்ஸவை நியமித்தது சட்ட விரோதமானது” , “நடக்கவிருக்கும் தேர்தல் சட்டவிரோதமானது” என அங்கலாய்ப்போரை தற்போது காணக்கூடியதாக இருக்கிறது. பொதுமக்களைவிட அரசியல்வாதிகளே இவ்வாறு கூறிக்கொள்வது பொதுமக்களை மடையர்களாக்குவதைத் தவிர வேறு எதற்குமில்லை!
-
கலைக்கப்படாது என்று எதிர்பார்த்த நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது எவ்வாறு..?
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுடன் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாக அரசாங்கத்தின் பதில் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கடந்த 26ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தையும் நவம்பர் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
-
கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு முப்பது வருடங்களில் கிடைத்த முதல் அமைச்சு
கொழும்பு: நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை (9) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.
-
“நாட்டை சீரழித்த இரு தரப்புக்கும் நாம் ஆதரவு அளிக்கப் போவதில்லை”- ஜே.வி.பி
நுகேகொட: 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும். இதில் ஆறு இடங்களை வைத்துள்ள ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) வியாழக்கிழமையன்று பிற்பகலில் கொழும்பு-நுகேகொட பகுதியில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் ரணில், மஹிந்த ஆகிய இருவரில், எந்தத் தரப்புக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசினர்.
-
அமிலத்தில் கரைக்கப்பட்டதா ஜமால் கஷோக்ஜியின் சடலம்?
இஸ்தான்புல்: கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் சடலம் வெட்டப்பட்டு, பிறகு அமிலத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துகானின் ஆலோசகரும், மூத்த துருக்கி அதிகாரியுமான யாசின் அக்டாய் தெரிவித்துள்ளார். இஸ்தான்புலில் கஷோக்ஜியை கொன்றவர்கள், அது குறித்த எந்த அடையாளத்தையும் விட்டுவிடக்கூடாது என எண்ணியிருக்கும் பட்சத்தில் “அதுமட்டுமே சாத்தியமான வாய்ப்பாக இருக்கக்கூடும்”, என்று அவர் தெரிவித்தார்.