கலைக்கப்படாது என்று எதிர்பார்த்த நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது எவ்வாறு..?

parliament[1]கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுடன் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாக அரசாங்கத்தின் பதில் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கடந்த 26ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தையும் நவம்பர் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் போதிய எம்பிக்களின் ஆதரவை பெற மகிந்த தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவை மகிந்த தரப்புக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தன.

தமிழ் தேசிய கூட்டணி, ஜனதா விமுக்தி பெரமுன ஆகியவற்றின் தலைவர்கள் சந்தித்து பேசியதுடன் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒத்துழைக்கப் போவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவில்லை.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கூட்டல் – கழித்தல்” கணக்குகள் எதுவும் பலனளிக்கவில்லை. மகிந்த தரப்புக்கு குறைந்தது 120 பேராவது ஆதரவளித்தால்தான் மகிந்த தரப்பு நாடாளுமன்றத்தை நாடியிருக்கும். இந்நிலையில் எதிர்பார்த்தவர்கள் தன் பக்கம் சாயாததால், முழு அமைச்சுக்கள் சிலவற்றையும், அரை அமைச்சுக்கள் சிலவற்றையும் தன்பக்கம் மீதி இருப்போருக்குக் கொடுத்துவிட்டு பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்துள்ளார்.

இதன் பின்னணியில் இந்தியா, சீனா, அமெரிக்கா அழுத்தங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இதனால்தான் மகிந்த, ஜனாதிபதி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றம் எக்காரணத்தாலும் கலைக்கப்படாது என ஜனாதிபதி தங்களிடம் கூறியதாக வட்ஸ்அப் குழுக்களில் தங்களின் ஒலிப்பதிவைப் பதிவிட்டிருந்தனர்.

தங்களது விசுவாசிகளுக்குக் கூட தெரியாத நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பது ஓர் விசித்திரமான விடயமாகும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s