காத்தான்குடி: “ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதமானது”, பிரதமராக மகிந்த ராஜபக்ஸவை நியமித்தது சட்ட விரோதமானது” , “நடக்கவிருக்கும் தேர்தல் சட்டவிரோதமானது” என அங்கலாய்ப்போரை தற்போது காணக்கூடியதாக இருக்கிறது. பொதுமக்களைவிட அரசியல்வாதிகளே இவ்வாறு கூறிக்கொள்வது பொதுமக்களை மடையர்களாக்குவதைத் தவிர வேறு எதற்குமில்லை!
இலங்கையில் எழுதப்பட்ட தண்டனைச் சட்டங்கள் பொதுமக்கள் மீதே திணிக்கப்படுகின்றன. எந்நவொரு அரசியல்வாதியும் இத்தண்டனைச் சட்டத்திற்குள் அகப்பட்டதைக் காண முடியாது.
“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்பது போல் “பாராளுமன்றம் இருக்கும்போதே காசை சேர்த்துக்கொள்” என்ற மிகத் தெளிவான விதி முறை இலங்கையில் இருந்து வருகிறது.
yourkattankudy/elections
இந்தத் தேர்தலில் நீங்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்குத்தியும், “மரணித்து”ம் யாருக்கு வாக்களித்தாளும், பாராளுமன்றம் தொங்கிக்கொண்டே இருக்கும். பின்னர் நீங்கள் போற்றியோரும், தூற்றியோரும் 50 கோடிகளையும் ஏனைய சுகபோகங்களையும் வாங்கிக்கொண்டு, சமூகத்துக்காகவும், உரிமைக்காகவும் காசை சேர்த்துக்கொள்ள பாராளுமன்றத்தில் தொங்குவார்கள்.
நமக்கு லீற்றருக்கு ஒரு பத்துரூபாயும், பானுக்கு 5 ரூபாயும், வாகனத்துக்கு ஐயாயிரமம் குறைத்துவிட்டால் அதுபோதும்!
தேர்தல் வருகிறது….
இனிமேல் அரசியல்வாதியின் காகிதம் உங்கள் வீட்டடியில் வந்து விழும்! லீவில போனவங்க திரும்பி வருவாங்க!
Leave a comment