வாஷிங்டன் DC: அமெரிக்காவின் தென்பகுதி வழியாக அகதிகளாக நுழைவோர் அந்நாட்டில் புகலிடம் கோருவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த தடையுத்தரவை விலக்கி சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க மனித உரிமை குழுக்களின் வாதங்களை கேட்ட சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜான் டிகர், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையுத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க எல்லைக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைவதை அடுத்து இந்த தடையுத்தரவை இம்மாதத் தொடக்கத்தில் டிரம்ப் அறிவித்திருந்தார்.தேசத்தின் நலன்களை கருத்திற்கொண்டு இவ்வாறு செய்ததாக டிரம்ப் கூறினாலும், அதை ஏற்றுக்கொள்வதற்கு மனித உரிமை அமைப்புகள் மறுத்தன.