இரண்டு மணி நேரம் இடம்பெற்ற சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு

ranil maithiriகொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது.

சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளதாக ஆளும் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

இன்றைய சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்திருந்தார்.

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பை புறக்கணித்திருந்தது.

ranil maithiri
yourkattankudy/politics

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளும் இன்று கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்பினரிடம் தெரிவித்திருந்ததாக அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

இதேவேளை, 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், அவர்களின் ஆதரவுக் கடிதங்களையும் எடுத்துக்கொண்டு, தாம் நாளை காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்து, தமது பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி இந்த சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் கூறியுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s