“நாட்டை சீரழித்த இரு தரப்புக்கும் நாம் ஆதரவு அளிக்கப் போவதில்லை”- ஜே.வி.பி

jvp sunilநுகேகொட: 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும். இதில் ஆறு இடங்களை வைத்துள்ள ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) வியாழக்கிழமையன்று பிற்பகலில் கொழும்பு-நுகேகொட பகுதியில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் ரணில், மஹிந்த ஆகிய இருவரில், எந்தத் தரப்புக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசினர்.

“இரு தரப்புமே ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்கள். எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும்வகையில் இருவருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை. நாங்கள் எடுத்த முடிவு, ரணிலுக்கு ஆதரவாக இருக்கிறது அல்லது மஹிந்தவுக்கு ஆதரவாக இருக்கிறது என சொல்லலாம். யாருக்கு ஆதரவாக இருப்பதற்காகவும் இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை. மக்கள் நலன் சார்ந்து எடுத்திருக்கிறோம்.” என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துநேதி தெரிவித்தார்.

இப்போது மஹிந்த – ரணில் ஆகிய இரு தரப்பிடமும் தலா சுமார் 100 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்லலாம். இலங்கையில் கட்சித் தாவல் தடைச் சட்டம் இல்லாத நிலையில், அறுதிப் பெரும்பான்மையை பெறுவதற்காக இரு தரப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

jvp sunil
yourkattankudy/srilanka-politics

சுமார் 20 கோடிக்கும் அதிகமாக பணம் அள்ளி வீசப்படுவதாகவும், கேட்டெடுக்கும் அமைச்சுக்கு தலைமைகள் அடிபணிந்து இன்னும் பல சலுகைகளை வழங்குவதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் திங்கட்கிழமையன்று மஹிந்த ஆதரவு அமைப்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மிகப் பெரிய பேரணி ஒன்றுக்கு ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s