அபுஜா: நைஜீரியாவின் தென் மேற்கில் உன்ள ஓஷுன் நாட்டின் ஆளுநர், தான் பணியில் இருந்த எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறவில்லை என்று கூறியுள்ளார். தற்போது அவர் பணியில் இருந்து விடைபெறும் நேரத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். ஓஷுன் ஆளுநர் ராவுஃப் அரெக்பெஸோலா ஒரு கூட்டத்தில் பேசும்போது, இந்த நாடு தனக்கு சாப்பாடு போட்டு, வாகனங்கள் அளித்து, தங்க இடமும் வழங்கியுள்ளதால், பணத் தேவை இருக்கவில்லை என்று தெரிவித்தார்.
“இதெல்லாம் என்னிடம் இருந்தபோது, எனக்கு பணம் தேவையில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.