Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மௌலவி நஸீர் பலாஹி காலமானார்

    காத்தான்குடி-05, கிளினிக் ஒழுங்கையைச் சேர்ந்த மெளலவி ஏ.எல்.எம்.நஸீர் (பலாஹி) (52) அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  • திருகோணமலை காணி பிரச்சினைகள், தனியான கல்வி வலயம் தொடர்பான ஆவணங்கள் கிழக்கு ஆளுநரிடம் கையளிப்பு

    – எம்.ரீ. ஹைதர் அலி திருகோணமலை: முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இராஜாங்க சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஆர்.எம்.அன்வர் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை  (17) ஆளுனர் செயலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான தெளிவான விளக்கத்தை கூறியதுடன், புல்மோட்டை காணி மற்றும் திருகோணமலை மாவட்ட காணிப் பிரச்சினைகள் தொடர்பாக உள்ளடங்கிய ஆவணங்கள் மற்றும் குச்சவெளி பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பான கடிதமொன்றினையும் ஆளுனரிடம் அன்வர் கையளித்தார்.

  • ஞானசாரரின் உரைகள் இந்துக்களையும் மதமாற்றத்திலிருந்து பாதுகாத்துள்ளது”

    சுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது. ஞானசார தேரரின் மதமாற்றத்திற்கு எதிரான எழுச்சிமிக்க உரைகள் இலங்கை பௌத்தர்களை மாத்திரமன்றி, இலங்கை இந்துக்களையும் மதமாற்றத்தில் இருந்து பாதுகாத்துள்ளது. 

  • “தமிழ் தேசிய கூட்டமைப்பும் -முஸ்லிம் காங்கிரசும் ரணிலுடன் செய்துகொண்ட ஒப்பந்தமே இன்று அரசியல் அமைப்பாக வெளிவருகின்றது”

    தமிழ் தேசிய கூட்டமைப்பும் -முஸ்லிம் காங்கிரசும் ரணிலுடன் செய்துகொண்ட ஒப்பந்தமே இன்று அரசியல் அமைப்பாக வெளிவருகின்றது எனவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.  மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களை இன்று சந்தித்த தேசிய இணக்க சம்மேளனம் இந்த கருத்துக்களை அவர்களிடம் முன்வைத்துள்ளனர்.

  • “மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர்”- ஜனாதிபதி மைத்திரி

    கொழும்பு: ஜனாதிபதி தேர்தல் பற்றி பல்வேறு பேச்சுக்களை உருவாக்கி, நடைபெறவேண்டியுள்ள மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். “தற்போது ஆறு மாகாண சபைகள் செயலிழந்துள்ளன. இது ஜனநாயகத்துக்கு ஒருபோதும் நல்லதல்ல. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்கும் இது முரணானதாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • சர்வதேச தடைகளை சமாளித்து கத்தார் தொடர்ந்து வெற்றிநடை போடுவது எப்படி?

    டோஹா: ஜூன் 2017இல் தன் அருகில் உள்ள நான்கு நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் தூதரக தடையால் பாதிக்கப்பட்டபோது, கத்தார் இரண்டு பெரிய பிரச்சனைகளை எதிர்கொண்டது என்று ஒரு நிபுணர் தெரிவிக்கிறார்.“கத்தார் நாட்டவர்களுக்கு இரண்டு விதமான சவால்கள் உள்ளன” என்று சொல்கிறார் லண்டனைச் சேர்ந்த Royal United Services Institute ன் மத்தியக் கிழக்கு ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஸ்டீபன்ஸ்.

  • கருத்து வேறுபாட்டில் மைத்திரி-மஹிந்த..?

    கொழும்பு: இவ்வருட இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பான வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

  • கிழக்கு ஆளுநருக்கு எதிரான ஹர்த்தாலும் அரசியல் பின்னணியும்

    இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: அநாமோதய தழிழ்க்குழு ஒன்றின் துண்டுப்பிரசுரத்திற்குப் பின்னர் கிழக்கு முஸ்லிம் சமூகம் ஹர்த்தாலுக்கு எதிரான நடவடிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டது. வழமை போன்று கடற்கரைக்குச் சென்று ‘கச்சான்கொட்டை‘ கொரித்துவிட்டு வீடு வந்து சேர ..சனிக்கிழமை பிறக்கிறது.

  • கிழக்கு மாகாண ஆளுநர் நியமனமும், இனவாதிகளின் ஹர்த்தாலுக்கான அழைப்பும்

    – எம்.ரீ. ஹைதர் அலி வட மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். என்ற உண்மை யாவரும் அறிந்த ஓர் விடயமாகும். வட மாகாணத்தில் பெரும்பான்மையினை கொண்ட தமிழ் மக்களை கௌரவிக்கும் முகமாக தமிழர் ஒருவரும், கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினை கொண்ட முஸ்லிம் மக்களை கௌரவிக்கும் முகமாக முஸ்லிம் ஒருவரும் ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிலையில் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளனர்.

  • ரோஸ் டெய்லரின் சாதனை

    சாக்ஸ்டன் ஓவல்: நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் இலங்கை அணிக்கு எதிராக 137 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். ரோஸ் டெய்லர் ஒருநாள் போட்டிகளில் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். தற்போது நடந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் கலக்கி வருகிறார். இலங்கை அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஸ் டெய்லர் 137 ரன்கள் அடித்து தன் 20வது சர்வதேச ஒருநாள் போட்டிகள் சதத்தை கடந்தார். நியூசிலாந்து வீரர்களிலேயே அதிக சதம் அடித்த…

  • லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் விமானசேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்

    MJ லண்டன்: ஐக்கிய இராச்சியத்தின் பிரதான விமானநிலையமான லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் விமானம் புறப்படும் ஓடு பாதையில் ஆளில்லா விமானம் ஒன்று தோன்றியதை அடுத்து, புறப்படும் விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஹீத்ரோ விமானசேவைகள் பிரிவு அறிவித்திருக்கிறது.

  • தப்பிச்சென்று புகழிடம் கோரியுள்ள சவுதி யுவதி

    பேங்கொக்: சவுதி அரேபியாவிலிருந்து தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவர்களுக்குத் தெரியாமல் தப்பித்து தாய்லாந்து வந்து சேர்ந்த 18 வயதுப் பெண் பேங்கொக் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிவிட்டதாக தெரிவித்த தாய்லாந்து குடியேற்றதுறை அதிகாரிகள் அவர் ஐ.நா. அகதிகள் முகமையின் பாதுகாப்பில் இருப்பதாக குறிப்பிட்டனர்.தாய்லாந்து குடியேற்ற போலீஸ் தலைவர், “ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தாய்லாந்து விமானநிலையத்திலிருந்து புறப்பட்டார்” என கூறி உள்ளார்.

←Previous Page
1 … 81 82 83 84 85 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar