• இர்ஷாட் . காதர்

img_1596காத்தான்குடி: அநாமோதய தழிழ்க்குழு ஒன்றின் துண்டுப்பிரசுரத்திற்குப் பின்னர் கிழக்கு முஸ்லிம் சமூகம் ஹர்த்தாலுக்கு எதிரான நடவடிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டது. வழமை போன்று கடற்கரைக்குச் சென்றுகச்சான்கொட்டைகொரித்துவிட்டு வீடு வந்து சேர ..சனிக்கிழமை பிறக்கிறது.

காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் இலங்கையின் பிரபலமான அரசியல்வாதிகளுள் ஒருவருமான எம்.எல்..எம் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு ஆளுநராக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு முஸ்லிம் சமூகம் பெருமளவில் மகிழ்ச்சியடைந்தது.

எனினும் கடந்த திங்கட்கிழமையிலிருந்து மட்டுமாவட்டத்தில் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான இன ரீதியான போராட்டம் திரைமறைவில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் வெளிப்படையானது.

இதன் பின்னணியில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டவருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் செயற்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வும், கருணாவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜாபக்ஸவின் கிழக்கு மாகாணவலக்கைஆட்டக்காரர்கள். மகிந்தவுடன் இணைந்து அண்மைக்காலமாக இலங்கை அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்திவரும் ஜனாதிபதி மைத்திரிபால ஹிஸ்புல்லாஹ்வை ஆளுநராக நியமித்தமை அரசியல் பின்னணியில் பார்க்கப்பட வேண்டிய ஓர் விடயமாகும்.

ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக நியமிக்கப்பட்டமை தழிழ் மக்களில் பலருக்கு பிடிக்காது, இருந்தாலும் இந்தளவுக்கு துவேசசங்களை ஊட்டி வளர்க்கும் மக்களல்லர் அவர்கள். ஒவ்வொரு இனத்திலும் எடுத்ததெற்கெல்லாம் தடியெடுப்பவன் போல ஓர் குழு இருக்கும். இவர்கள் மேற்கு அரசியலில் பணங்களையும் சொகுசுகளையும் பெற்றுக்கொண்டு, விசுவாசத்திற்காக எச்சி முட்களை நாவில் வைத்து சுவைப்பவர்கள்.

kattankudy-jpg-1
yourkattankudy/eastern

இப்படியான ஓர் விசுவாசத்தின் வெளிப்பாடுதான் இந்த வெள்ளி ஹர்த்தால்.
பெரும்பாலான தழிழ் மக்கள் அமைதியாக இருக்கையில் கருணா அம்மானைத் தூண்டிவிட்டது யார்…?

கிழக்கில் தழிழ்முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் குளிர்காயும் மேற்கு அரசியல்வாதிகளின் ஓர் திட்டமே இந்த ஆளுநரும் ஹர்த்தாலும் ஆகும்.

ஓர் அரசாங்கத்தின் ஆதரவுடன் அதாவது ஊரடங்கை அமுல்படுத்திவிட்டு, பொலிஸார், இராணுவத்தின் ஆதரவுடன் ஓர் சமூகத்தை அடக்கி இன்னொரு சமூகத்தை எரிக்க முடியுமே தவிர, கிழக்கில் தழிழ் முஸ்லிம் உறவை அழுத்கமை போன்றோ, திகன போன்றோ பொதுமக்களைத் தூண்டி இனக்கலவரத்தை ஏற்படுத்த முடியாது என்பதே உண்மையாகும்.

மேற்கு அரசியல் திட்டம் தெரியாமல், இதனை ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கான ஓர் விளம்பரமாக அவரது ஆதரவுப் (பேஸ்புக்) போராளிகள் எடுத்துக்கொண்டார்களே தவிர, வேறெதையும் முஸ்லிம் சமூகம் சாதிக்கவில்லை.

இவ்வாறான கருணா குழுக்களால் ஓரிரு கடைகளை எரிக்க, ஒளிந்திருந்து இரவு நேரங்களில் செல்லும் காத்தான்குடி வாகனங்களுக்கு கல்லெறிய முடியுமே தவிர, வேறெதையும் சாதிக்க முடியாது.

மேற்கு அரசியல் கிழக்கை துண்டாட நினைக்கிறது. நாம் தான் எதிர்கால சமூகத்திற்காக அவதானமாகச் செயற்பட வேண்டும்.

யுவர்காத்தான்குடிக்காக
இர்ஷாட் . காதர்