“மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர்”- ஜனாதிபதி மைத்திரி

maithiriகொழும்பு: ஜனாதிபதி தேர்தல் பற்றி பல்வேறு பேச்சுக்களை உருவாக்கி, நடைபெறவேண்டியுள்ள மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். “தற்போது ஆறு மாகாண சபைகள் செயலிழந்துள்ளன. இது ஜனநாயகத்துக்கு ஒருபோதும் நல்லதல்ல. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்கும் இது முரணானதாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசுகின்றவர்கள், அதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலுக்கு தயாராக வேண்டுமென தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன, தான் அது பற்றி தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊவா மற்றும் மத்திய மாகாண அமைப்பாளர்களை கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துப் பேசியபோதே இந்த விடயங்களைக் கூறினார்.மேலும், விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்தி, மக்களின் வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

maithiri
yourkattankudy/srilanka politics

“புதிய அமைச்சரவையை நியமித்து மூன்று வாரங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில், அந்த அமைச்சுக்களின் கீழ்வரும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் நிறுவனங்களுக்கான தலைவர்கள், பணிப்பாளர் சபை நியமிக்கப்படாமைக்கு ஜனாதிபதி அலுவலகத்தை சில தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அது முற்றிலும் தவறான குற்றச்சாட்டாகும்,” என்றும் அவர் கூறினார்.

இந்த நிலைமைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களே வகைகூற வேண்டும் என்பதுடன், குறித்த பரிந்துரைகள் பிரதமரின் அலுவலகத்தினால் ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சமர்ப்பிக்கப்படாமையே இந்த தாமதத்திற்கு காரணமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கான பொறுப்பை ஜனாதிபதி அலுவலகம் ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s