• MJ

london heathrowலண்டன்: ஐக்கிய இராச்சியத்தின் பிரதான விமானநிலையமான லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் விமானம் புறப்படும் ஓடு பாதையில் ஆளில்லா விமானம் ஒன்று தோன்றியதை அடுத்து, புறப்படும் விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஹீத்ரோ விமானசேவைகள் பிரிவு அறிவித்திருக்கிறது.

இன்று மாலை 5:05 மணிக்கு ஆளில்லா விமானம் தோன்றியதையடுத்து மெட்ரோபொலிடன் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக புறப்படும் விமானங்கள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

கடந்த டிசம்பர் 19ம் திகதி லண்டன் கெட்விக் விமான நிலைய ஓடுபாதையில் இவ்வாறான ஆளில்லா விமானம் தோன்றியதை அடுத்து இரு நாட்கள் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.