ரோஸ் டெய்லரின் சாதனை

ross-taylorசாக்ஸ்டன் ஓவல்: நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் இலங்கை அணிக்கு எதிராக 137 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். ரோஸ் டெய்லர் ஒருநாள் போட்டிகளில் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். தற்போது நடந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் கலக்கி வருகிறார். இலங்கை அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஸ் டெய்லர் 137 ரன்கள் அடித்து தன் 20வது சர்வதேச ஒருநாள் போட்டிகள் சதத்தை கடந்தார். நியூசிலாந்து வீரர்களிலேயே அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும், அவர் தொடர்ந்து ஆறாவது முறையாக ஒருநாள் போட்டிகளில் 5௦ அல்லது அதற்கும் மேலான ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் சிறந்த பேட்ஸ்மேன்கள் கோலி, சச்சினின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

ross-taylor

yourkattankudy/cricket

இந்திய அளவில் சச்சின் மற்றும் கோலி 5 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 50+ ரன்களை குவித்து இருந்தனர். ரோஸ் டெய்லர் ஆறு முறை 50+ ரன்களை தொடர்ந்து அடித்து இவர்களை முந்தியுள்ளார்.

எனினும், இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத் ஆவார். அவர் தொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளில் 50+ ரன்களை அடித்துள்ளார். அவரை எட்ட ரோஸ் டெய்லர் இன்னும் மூன்று போட்டிகளில் அரைசதம் அடிக்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s