WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்…!

    டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்களால் அரசாங்கமே அதிர்ந்து போயிருக்கிறது… அரசியல்வாதிகள்… அமைச்சர்மார் – எம் பி மார் – மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் என கிட்டத்தட்ட எழுபது பேருக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் தன்னுடன் தொடர்பில் இருந்ததாக மதுஷ் வாக்குமூலம் டுபாய் பொலிஸாரிடம் அளித்துள்ளார்…

  • ஊழல், மோசடி முறைப்பாடுகள் பொறுப்பேற்பு ஆரம்பம்

    கொழும்பு: 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 டிசெம்பர் மாதம் 31 ஆந் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முறைப்பாடுகளை பொறுப்பேற்க ஆரம்பித்துள்ளது.

  • வெள்ளைப்படுதலை குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்

    தேங்காய் எண்ணெய் என்பது, காய்ந்த தேங்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும். இதில் பல உடல்நல மற்றும் அழகு நன்மைகள் உள்ளன. மேலும் இதனால், ஈஸ்ட் தொற்றுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இன்னும் சொல்லப்போனால் இது இயற்கை வைத்தியங்களில் மிகச்சிறந்த ஒன்று. இந்த எண்ணையில் மூன்று விதமான கொழுப்பு அமிலம் உள்ளது. அவை லாரிக் அசிட், கேப்ரிக் அசிட், மற்றும் கேபிரில்லிக் அசிட். இது ஈஸ்ட் தொற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

  • பிரபல போதைப் பொருள் வியாபாரி ‘டீ மஞ்சு’ என்பவரது உதவியாட்கள் கைது

    வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் பிரபல போதைப் பொருள் வியாபாரியான ‘டீ மஞ்சு’ என்பவரது உதவியாட்கள் மூவர் ஹெரோயின் மற்றும் ஹசீஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (06) பிற்பகல், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே ஹேகித்த பிரதேசத்தில் போதைப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

  • சுங்க பணிப்பாளர் நாயகமாக மீண்டும் திருமதி சார்ள்ஸ்

    சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை, மீண்டும் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய அவர், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் (05) கூடிய அமைச்சரவையில் அவரை மீண்டும் அப்பதவியில் நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

  • ‘முட்டாள்’களின் சுதந்திர தினம்

    AK-79 இலங்கையின் வழமையான சுதந்திர தின நிகழ்வுகள் போன்று 71வது சுதந்திர தினமும் இன்று அரங்கேறுகிறது. ஜனாதிபதியும், பிரதமரும், உள்ளுர் அரசியல்வாதிகளும் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு, வந்திருப்போர் வாயில் சாந்தியும் சமாதானமும் மலரட்டும் என்ற வார்த்தையை அள்ளிவிட்டு விடைபெறும் ஓர் விடுமுறை நாள் இன்றாகும்.

  • உலகின் முதல் ஹோல்லெஸ் ஸ்மார்ட்போன்

    உலகின் முதல் ஹோல்லெஸ் ஸ்மார்ட்போன் மீஸு ஜீரோ மாடலை மீஸு நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மிரட்டலான ஹோல்லெஸ் மீஸு ஜீரோ ஸ்மார்ட்போன் இல் ஒரு துளைகள் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹோல்லெஸ் ஸ்மார்ட்போன் இல் பட்டன்கள் மற்றும் போர்ட்களுக்கென எந்தத் துளை அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதே சிறப்பு.

  • ஜனாதிபதியின் மரணம் தொடர்பாக கணிப்பு கூறிய ஜோதிடர் விடுதலை

    கொழும்பு: “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்கு முன்னர் மரணிப்பார்” என கணிப்பு கூறிய ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, புதன்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார். மேற்படி வழக்கை சட்டமா அதிபர் மீளப்பெற்றமையினால், ஜோதிடரை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

  • அமெரிக்காவை வாட்டி எடுக்கும் வரலாறு காணாத பனி!

    சிகாகோ: அமெரிக்காவில் நிலவும் கடும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ரயில் பாதைகள் சூடாக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆர்க்டிக் துருவத்தின் மேலடுக்குக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், அமெரிக்காவில் வரலாறு காணாத உறைய வைக்கும் பனி ஏற்பட்டுள்ளது.

  • கத்தார் வாழ் காத்தான்குடி சமூகத்தின் தேசிய விளையாட்டு தின விழா ஒன்று கூடலுக்கான அறிவிப்பு

    அன்புள்ள சகோதரர்களே! கடந்த கத்தார் தேசிய தினத்தன்று எமது KCQ இன் அங்குரார்ப்பண விழாவை ஒரு ஒன்று கூடலாக ஏற்பாடு செய்திருந்தோம் அதில் அநேக சகோதரர்கள் குடும்ப சகிதம் வருகைதந்திருந்தார்கள். எமது அமைப்பின் முக்கியத்துவத்தை அறிந்து அதட்கு முழு ஆதரவுகளையும் தருவதாக வாக்களித்து எங்களோடு இணைந்து கொண்டனர் மற்றும் அன்றைய ஒன்று கூடலில் தாங்கள் அடைந்த மகிழ்ச்சிகளை எங்களோடு பகிர்ந்து கொண்டதில், அந்நிகழ்வின் நோக்கத்தை அடைந்து கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்!

  • “இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த அரசாங்கத்தில் கிடைக்காது”- அமைச்சர் றிஷாட்

    வவுனியா: இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினை தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தனக்கு கிடையாது என்று,  – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்  றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

  • சர்ப்றாஸ் அகமதிற்கு 4 போட்டிகள் விளையாடத் தடை

    கெப் டவ்ன்: பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா இடையே டர்பனில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தங்களின் இனவெறி எதிர்ப்பு விதியை சர்பராஸ் அகமது மீறிவிட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. 31 வயதாகும் சர்பராஸ் தனது செயலை குறித்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். மேலும் குறிப்பாக யாரையும் குறிப்பிட்டு இந்த வார்த்தையை தான் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

←Previous Page
1 … 79 80 81 82 83 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar