கத்தார் வாழ் காத்தான்குடி சமூகத்தின் தேசிய விளையாட்டு தின விழா ஒன்று கூடலுக்கான அறிவிப்பு

qatarஅன்புள்ள சகோதரர்களே!

கடந்த கத்தார் தேசிய தினத்தன்று எமது KCQ இன் அங்குரார்ப்பண விழாவை ஒரு ஒன்று கூடலாக ஏற்பாடு செய்திருந்தோம் அதில் அநேக சகோதரர்கள் குடும்ப சகிதம் வருகைதந்திருந்தார்கள். எமது அமைப்பின் முக்கியத்துவத்தை அறிந்து அதட்கு முழு ஆதரவுகளையும் தருவதாக வாக்களித்து எங்களோடு இணைந்து கொண்டனர் மற்றும் அன்றைய ஒன்று கூடலில் தாங்கள் அடைந்த மகிழ்ச்சிகளை எங்களோடு பகிர்ந்து கொண்டதில், அந்நிகழ்வின் நோக்கத்தை அடைந்து கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்!

அந்த நிகழ்வின் பின்னர் பல சகோதரர்கள் எங்களை தொடர்புகொண்டு தாங்கள் அதில் கலந்து கொள்ளாததையிட்டு பெரும் கவலை அடைவதாகவும், இன்னும் தங்களுக்கு இந்நிகழ்வு பற்றிய செய்தி கிடைக்கவில்லை என்றும் சொன்னார்கள்.

qatar

இதை கருத்தில் கொண்ட எமது KCQ நிருவாகம் வருகின்ற கத்தார் தேசிய விளையாட்டு தினம் அன்று மற்றுமொரு ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ளனர் இதில் விடுபட்ட அனைவரையும் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் நிருவாகம் உறுதியாக உள்ளது.

அன்றைய தினம் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், சிறுவர் போட்டிகள் என பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். எனவே தங்களது வருகையை உறுதிப்படுத்துமுகமாக வழங்கப்பட்டிருக்கும் படிவத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்யுமாறு அன்பாய் வேண்டிக்கொள்கிறோம். அத்துடன் இந்த அறிவிப்பை கத்தாரில் தொழில் புரியும் காத்தான்குடி அதை அண்டிய பிரதேச சகோதரர்களுக்கு எத்திவைக்குமாறும் அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்.

Please fill this form in below link
https://docs.google.com/…/1FAIpQLSfWvv8IrOgYv4jfc…/viewform…

  • KCQ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s