-
தற்கொலைத் தாக்குதல்: சஹரான் குழுவினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்தது எப்படி?
சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதங்களாக போலீஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி, சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக அழுகிறார்.
-
புதன்கிழமையும் மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் 20 ஓவர்களில் 148 ஓட்டங்களை இந்தியா பெறவேண்டும்
மன்செஸ்டர்: இந்தியா நியூசிலாந்து இடையேயான அரை இறுதிப் போட்டி (9) மழையால் கைவிடப்பட்டுள்ளது. ஆனால் நாளை (10) ஆட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நேரப்படி காலை 10.30 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி மதியம் மூன்று மணிக்கு போட்டி துவங்கும். நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்திருக்கிறது. நாளை 47-வது ஓவரின் இரண்டாவது பந்தை புவனேஷ்வர் குமார் வீசுவார். நியூசிலாந்து எஞ்சிய 23 பந்துகளையும் சந்தித்து 50 ஓவர்களையும் நிறைவு செய்யும்.
-
மழை..: அடுத்து என்ன நடக்கும்?
லண்டன்: இந்தப் போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது கடுமையாக மழை பெய்ததை அடுத்து போட்டி தடைபட்டது. வீரர்கள் மைதானத்தை விட்டு விரைவாக வெளியேறினர்.
-
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
கொழும்பு: மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்புகை பிரயோகமும் , நீர்தாரை பிரயோகமும் நடத்தினர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது.
-
8 முறை அரை இறுதியில் விளையாடும் நியூசிலாந்து: ‘சொந்த மைதான’த்தில் இந்தியாவை வீழ்த்துமா?
முகமட் ஜலீஸ், இங்கிலாந்து மன்செஸ்டர்: உலகக்கிண்ண கிரிக்கட் சுற்றின் முதலாவது அரை இறுதிப்போட்டி இன்று (9) செவ்வாய்க்கிழமை மன்செஸ்டர் நகரின் ஓல்ட் ட்ரஃபேர்ட் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகிறது. மன்செஸ்டர் இங்கிலாந்தின் முக்கிய நகரங்களுள் 6வது இடத்தில் காணப்படுகிறது. வெள்ளை இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட மன்செஸ்டர் நகரில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
-
11 வருடங்களுக்குப் பின்னர் அதே இரு தலைவர்களும் அரை இறுதியில் சந்திக்கும் அரிய வாய்ப்பு
லண்டன்: நடப்பு உலக கோப்பை தொடர் அரையிறுதியில் 11 ஆண்டுகளுக்கு பின் கோலி தலைமையில் இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணியும் மோதுகிறது. 2019 உலகக்கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் சுற்றுகள் முடிந்து விட்டன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கின்றன.
-
“அலியார் சந்தி” தொடக்கம் “ஷங்ரி லா” வரை… (2)
-2- உசேன்YKK 1990 ஆரம்ப காலங்களில் அப்துர் ரஊப் மௌலவியின் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற துண்டுப்பிரசுரங்கள் அவ்வப்போது என்று கூறுவதைவிட தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்தன என்றே கூற வேண்டும். அந்த துண்டுப்பிரசுரங்களில்கூட தங்களது ஆதரவாளர்களை தௌஹீத்வாதிகளே என்றே அழைத்து எழுதி வந்தார். காத்தான்குடிக்குள் 2000 ஆண்டு ஆரம்ப காலம் அதாவது தௌஹீத் இயக்கங்களாக விரிவுபடும்வரை தங்கள் ஆதரவாளர்களை தௌஹீத்வாதிகள் என்றே அவரும் அழைத்துவந்தார்.
-
நடுவர் புரூஸ் ஓக்ஸின்ஃபோர்ட்டின் பாதுகாப்புச்சாதனம்
லண்டன்: அவுஸ்திரேலிய நடுவர் புரூஸ் ஓக்ஸின்ஃபோர்ட், நடுவர்களுக்காக ஒரு புரட்சிகரமான பாதுகாப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார். 2016 ஐபிஎல்-ன் போது குஜராத் லயன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஒரு கை பாதுகாப்பானை ( arm protector) அவர் பயன்படுத்தினார். புரூஸ்-ன் மணிக்கட்டில் அரைவட்டம் வடிவில் இருந்த அந்த கை பாதுகாப்பான், குழாய் வடிவில் அவரது முழங்கை வரையிலும் நீண்டிருந்தது.
-
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை அடுத்து பாதுகாப்புத்தரப்பில் எழுந்துவரும் சந்தேகங்கள்
கொழும்பு: கிடைக்க பெற்ற புலனாய்வு தகவல்களின் பிரகாரம் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
“அலியார் சந்தி” தொடக்கம் “ஷங்ரி லா” வரை…
உசேன்YKK காத்தான்குடி: அரபு மத்ரஸாக்கள் இலங்கையில் உருவாகுவதற்கு முன்னர் ஆலிம்களாக அழைக்கப்பட்ட மார்க்க அறிஞர்கள், மத்ரஸாக்களின் வருகைக்குப்பின்னர் மௌலவி எனவும், ஹஸ்ரத் எனவும் அழைக்கப்பட்டு வந்தனர். ஆலிம்களின் நேரான மற்றும் சில தவறான வழிகாட்டல்களையடுத்து உலமாக்கள் என்றும் மௌலவிமார்கள் என்றும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் காத்தான்குடிக்குள் உதயமாகினர்.
-
அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
பேர்மிங்ஹம்: இந்தியா 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று 1 போட்டி மழையால் தடைபட்டு 1 போட்டி தோல்வி என்று 13 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்கு இரண்டாவது அணியாக நுழைந்து உள்ளது. முதல் அணியாக அவுஸ்திரேலியா உள்ளது.
-
ஈஸ்டர் தாக்குதல்: பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது
கொழும்பு: ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் இருவரும் இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.