கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சலூன் கதவு பழுதடைந்துள்ளதாக ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வெற்றியீட்ட முடியாது. சனி மாற்றம் ஜனாதிபதிக்கு சரியில்லை. அண்மையில் சுவரொட்டி ஒன்றில் ஜனாதிபதிக்கு எல்லைகள் கிடையாது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த போட்டி வெற்றியீட்ட வேண்டிய போட்டியொன்று. நாம் எப்படியாவது வெற்றியீட்டுவோம். ஆளும் கட்சியின் சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்கள் வெளியேறியுள்ளனர். சரத் பொன்சேகா, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரின் ஒத்துழைப்பு எமக்குக் கிடைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதவி செய்யும். ஹக்கீம் விரைவில் ஆளும் கட்சியை விட்டு வெளியேறுவார். பெருந்தோட்டப் பகுதிகளின் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள முடியும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கலிகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் நேற்று அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
Published by

Leave a comment