கொழும்பு: கலாசார அலுவல்கள் அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க தனது அமைச்சின் அலுவலகத்தை காலி செய்து கொண்டிருப்பதாக சற்று முன்னர் கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.நேற்று சனிக்கிழமை தொடக்கம் ஆரம்பித்துள்ள இந்த நடவடிக்கை விடுமுறை நாளான இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
தன்னுடைய தனிப்பட்ட கோப்புகள், தனிப்பட்ட முறையில் கிடைத்த பரிசுகள், முக்கிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் என்பவற்றை அமைச்சர் ஏக்கநாயக்க முன்னின்று தெரிவு செய்து அலுவலகத்தை விட்டும் அகற்றி கொண்டிருப்பதாக குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் அறிய கிடைத்துள்ளது.
இது தொடர்பான தகவல் அறிந்த ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரும், முக்கிய அமைச்சு ஒன்றின் செயலாளரும் அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்கவை தொடர்புகொள்ள பல தடவைகள் முயன்றும் அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனையடுத்து குறித்த உயர்மட்ட அமைச்சர் தற்போது டீ.பி. ஏக்கநாயக்கவை நேரடியாக சந்திப்பதற்கு விரைந்து கொண்டிருப்பதாக குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது
Published by

Leave a comment