காத்தான்குடி: ஆளும் அரசாங்கத்தில் ஏற்பட்டிருக்கும் தற்போதய ஆட்சியின் பலவீனம் காரணமாக ஆடிப்போயிருக்கிறது அரசாங்கம். ஜனாதிபதி ஆளும் கட்சி வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆளும் கூட்டணி அறிவித்தவுடன், காத்தான்குடியைத் தவிர இலங்கையில் வேறு எங்கிலும் மக்கள் கணக்கெடுக்கவே இல்லை!
மாறாக மக்களின் எதிர்பார்ப்பெல்லாம் ஜனாதிபதி மஹிந்தவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதாகவே இருந்தது.
குடும்ப அரசாங்கம், ஆட்சி, ஊழல்கள் போன்ற இன்னோரன்ன காரணங்களாலும், அதர பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றத்தாலும் இலங்கை மக்கள் மொத்தமாகவே தற்போதய ஆளும் அரசாங்கத்தை எதிர்க்க ஆரம்பித்துவிட்ட நிலையிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற இருக்கின்றது.
கொழும்பு அரசியல் இவ்வாறிருக்க, இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பெல்டி’ அடிப்பதற்கு சகுணம் பார்த்திருக்கின்றர். ஆளும் அரசாங்கத்தில் இருந்து, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக மீண்டும் தெரிவானால் எல்லையற்ற கொடுப்பனவுகளும், ‘சொகுசு’களும் மென் மேலும் வழங்கப்படும். அது மாத்திரமன்றி, பாராளுமன்ற தேர்தலை நடாத்தாமல், பாராளுமன்ற வாக்களிப்பின் உதவியுடன் மேலும் 6 வருடத்துக்கு பாராளுமன்ற கதிரைகளையும் தக்க வைத்துக்கொள்ளவும் முடியும்.
எனவே இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரம் ஜனாதிபதி மஹிந்தவை மீண்டும் வெற்றிபெறச் செய்வதற்கு ஆளும் கூட்டணியின் பா.உறுப்பினர்களின் ‘அதிகபட்ச தியாகம்’ ஆளும் கூட்டணிக்கு குறிப்பாக மஹிந்த குடும்ப கூட்டணிக்குத் தேவைப்படுகிறது.
இதில் பெரும்பாலான சிங்கள பா.உறுப்பினர்கள் அக்கறை எடுக்காவிட்டாலும், ஆளும் கூட்டணிக்கு என்றும் ‘நன்றி-விசுவாச’த்தோடு கடமையாற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவி ஜனாதிபதிக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றது.
கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட வண்முறைகள், கலவரங்கள், பள்ளிவாயல் தாக்குதல்கள் மற்றும் ஹலால் அகற்றல் போன்ற காரணங்களால் முஸ்லிம்கள் ஆளும் கூட்டணியை ஆதரிப்பதில் ஆர்வம் காட்டப்போவதில்லை. இதன் வெளிப்பாடு கடந்த ஊவா தேர்தல் முடிவில் தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தது.
முஸ்லிம்களின் மன நிலை இவ்வாறு இருக்கும் போது, நாம எப்படி மஹிந்தவை ஆதரிக்குமாறு முஸ்லிம்களைக் கோர முடியும் என தலை சொறிந்தவர்களாக திகைத்து நிற்கின்றனர் முஸ்லிம் பா.உறுப்பினர்கள்.
மக்கள் ஏழையாகவே போய்க்கொண்டிருக்கின்றார்கள். அரசியல்வாதிகள் செல்வந்தர்களாக உயர்ந்துகொண்டே போகின்ற இந்நிலையில், ஜனாதிபதியை எதிர்க்கும் எதிரிணி வேட்பாளர் கூட்டணிக்கு என்றைக்கும் எதிர்பாராத மவுசு நேற்றையிலிருந்து அதிகரித்திருக்கின்றது. அரசாங்கம் சரிய ஆரம்பித்திருக்கின்றது.
இவ்வாறான ஓர் தளம்பல் நிலையை சுவர் மேல் உட்கார்ந்திருக்கும் பூனைபோல் கார்த்திருக்கின்றனர் எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள். அது எத்திசையில் பாயும் என்று சொல்ல முடியாது. “பாராளுமன்ற ஜனாஸாக்கள்” என்று அழைக்கப்படும் எமது முஸ்லிம் பா.உறுப்பினர்களின் ‘பெல்டி’ அல்லது ‘விசுவாசம்’ விரைவில் தெரியவரும். காத்திருப்போம்… இன்ஷாஅல்லாஹ்!
Published by
![cat[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/11/cat1.jpg?w=150&h=100)
![cat[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/11/cat1.jpg?w=621&h=416)
Leave a comment