காத்தான்குடி: காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பகுதியில் இவ்வருடத்திற்கான வரி மதிப்பீடு கணிசமாக அதிகரித்துள்ளது தொடர்பாகவும், இதனால் வரியிறுப்பாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாவதாகவும், இதனைக்குறைப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளதா என ஊடகவியலாளர் மாநாட்டின்போது காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ் எச் அஸ்பரிடம் வினவப்பட்டது.
இதற்கு விளக்கமளித்த நகர சபைத் தவிசாளர் எஸ் எச் அஸ்பர்,
“2010ம் ஆண்டு தொடக்கம் வரி மதிப்பீட்டுத்திணைக்களத்தினால் எமது பகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்யப்படன. இதற்கமைவாக உரிமையாளரின் சொத்தின் பெறுமதியில் 12 தொடக்கம் 14 வீதம் வரையான வரி அறவிடுமாறு அத்திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது”.
“இருப்பினும் மக்களின் நலன் கருதி, நகர சபைத்தீர்மானத்தின் அடிப்படையில், 5 வீதமாக குறைத்துள்ளோம். இவ்வாறு குறைக்கப்பட்ட 5 வீத வரியையே 2015ம் ஆண்டுக்கான வரியாக செலுத்தப்படுகிறது” என தெரிவித்தார்.
இருந்தபோதிலும், மக்களின் வாழ்க்கைச் சுமையினை கருத்திற்கொண்டு, வரி அதிகரிப்பினை மீள்பரிசீலனை செய்யுமாறும், வரியிறுப்பாளர்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம் எனவும், ஊடகவியலாளர்களினால் நகரசபைத் தவிசாளரிடம் வேண்டுகோள் விடப்பட்டது.
Published by

Leave a comment