அலரிமாளிகையில் பயன்படுத்தப்பட்டுள்ள புலிகளின் வாகனங்கள்

temple treesகொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் ஜனாதிபதி மாளிகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட போரின் பின்னர் மீட்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான பல அதி சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி மாளிகையிலும், ஜனாதிபதி செயலகத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளன.

போர் இடம்பெற்ற காலத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களும் ஜனாதிபதி மாளிகையிலும், ஜனாதிபதி செயலகத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்தும், அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் மீட்கப்பட்ட வாகனங்கள் பற்றிய தகவல்கள் உரிய முறையில் பதியப்பட்டிருக்கவில்லை.

பல வாகனங்கள் பற்றிய தகவல்கள் எந்தவொரு ஆவணத்திலும் பதியப்படாமலே ஜனாதிபதி மாளிகையிலும், ஜனாதிபதி செயலகத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. வாகனங்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Published by

One response to “அலரிமாளிகையில் பயன்படுத்தப்பட்டுள்ள புலிகளின் வாகனங்கள்”

  1. No invemtories for the captured cash, gold, vehicles, properties, arms, amunitions, war material including ships, vehicles, armouries etc., etc..and not shown to public or produced to courts! This is totally breach of trust, Contitution and the Law of the country!

Leave a comment