Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கட்டார் அமீருடன் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

    கொழும்பு: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு கட்டார் அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமென்று அந்நாட்டு அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த கட்டார் நாட்டு அமீர் இலங்கையில் மூன்று மணித்தியாலங்கள் தங்கியிருந்ததுடன் மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட பின்னர் நாடு திரும்பினார்.

  • ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக குறைப்பு: இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது

    கொழும்பு: அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை நேற்று சமர்ப்பித்தார். இதன்படி, ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. அதேநேரம், ஆறு வருடகாலமாக இருந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

  • ஜெகத் ஜெயசூரியவுடன் கைகுலுக்க மறுத்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

    கொழும்பு: பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்ற சரத் பொன்சேகா, இலங்கை கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுடன் கைகுலுக்க மறுப்புத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தும் நிகழ்வு இடம்பெற்றது.

  • பிரான்ஸில் 150 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

    பரிஸ்: பிரன்ஸில் அல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன் விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • பல கோடி இதயங்களை கண்ணீரால் நனைத்த தென்னாபிரிக்க வீரர்களின் சோகக் காட்சி

  • 40 வருட கனவு: இறுதியாட்டத்தில் நுழைந்தது நியுசிலாந்து

    – AF 80 ஓக்லாந்த்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை நூலிழையில் வீழ்த்தி நியுசிலாந்து இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்துள்ளது.ஒரு பந்து மட்டுமே எஞ்சிய நிலையில், நியுசிலாந்தின் எலியட் சிக்சர் அடித்து தென்னாப்பிரிக்காவின் கனவுகளை தவிடுபொடியாக்கினார்.

  • மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக எம்.ஐ.சேகு அலி நியமிக்கப்பட்டுள்ளார்

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கல்குடா: மட்டக்களப்பு மத்தி கல்விவலயத்துக்கு புதிய பணிப்பாளராக கின்னியா கல்வி வலயத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.ஐ.சேகு அலி புதிய பணிப்பாளராக தனது கடமையை பொறுப்பேற்க உள்ளதாக கிடைத்த தகவலை முன்னிட்டு இன்று காலை அவருடன் தொலை பேசியினூடாக இடமாற்றம் சம்பந்தமாக வினவியபோது அதனை உறுதிப்படுத்தினார்.

  • மீதிப் பணத்தை கொடுக்காத நடத்துனர்கள் தொடர்பாக 3440 முறைப்பாடுகள்

    – எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: கடந்த வருடம் (2014) பிரயாணிகளுக்கு மீதிப் பணத்தை கொடுக்கவில்லை என தனியார் பஸ் நடத்துனர்களுக்கு எதிராக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் 3440 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே ஆண்டில் தனியார் போக்குவரத்து சேவை தொடர்பாக 7171 முறைப்பாடுகள் பதிவு கிடைக்கப்பெற்றுள்ளதோடு அவற்றுள்

  • அமைச்சுப் பதவிகளை ஏற்றாலும் பொலீஸ் விசாரைணகள் தொடரும் – பொலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

    – எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்கள் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தாலும் கூட அவர்களுள் பலருக்கெதிராக பொலீஸ் திணைக்களத்திற்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் கைவிடப்படமாட்டாது என பொலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

  • 1வது அரையிறுதிப் போட்டி: நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம்

    அவுக்லாண்ட்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 1வது அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. இன்னும் சற்று நேரத்தில் நியூசிலாந்தின் அவுக்லாண்ட், ஈடன் பார்க் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

  • கட்டார் அமீர் இன்று இலங்கை வருகை

    கொழும்பு: கட்டார் நாட்டின் அமீர், ஷெய்க் தமீம் பின் ஹமட் – அல்- தானி இன்று (24) இலங்கை வருகின்றார்.சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை மாத்திரமே இலங்கையில் தங்கியிருக்கும் இவர் மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

  • பிரதமர் ரணிலுக்கு வயது 66: அவரது சுய விபரம்

    பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று 66வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்கி ரமசிங்க, எஸ்மன்ட் மற்றும் நஸினி விக்கிரமசிங்க தம்பதிகளுக்கு பிறந்த இரண்டாவது மகனாவார்.

←Previous Page
1 … 483 484 485 486 487 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar