அவுக்லாண்ட்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 1வது அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. இன்னும் சற்று நேரத்தில் நியூசிலாந்தின் அவுக்லாண்ட், ஈடன் பார்க் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.
இதுவரை காலம் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் இரு அணிகளும் உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு, நியூசிலாந்து அணி ஏழாவது தடவையாக உலகக் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் இன்று போட்டியிடவுள்ளது.
இப்போட்டியில் சாதனைகள் இடம்பெறலாம் என உலக கிரிக்கெட் பிரபலங்களால் எதிபார்க்கப்படுகிறது.
Published by


Leave a comment