Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஐ. ம. சு. மு. உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை நாரஹேன்பிட்டியவில் சந்தித்தார் மஹிந்த

    ஐ. ம. சு. மு. உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை நாரஹேன்பிட்டிய அபயாராமவில் வைத்து நேற்று சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு கூடியுள்ளவர்களுடன் உரையாடுவதைப் படத்தில் காணலாம்.

  • அல்ப்ஸ் விமான விபத்தும் தேடல்களும்

    பரிஸ்: பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை ஜெர்மானிய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்த பகுதியில், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாட்டின் தலைவர்கள் சந்தித்துள்ளனர்.அந்த மலைப் பகுதியிலுள்ள செய்ன்-லெசல்ப்ஸ் கிராமத்துக்கு அருகில் விழுந்து நொறுங்கிய அந்த விமானத்தில் பயணித்த 150 பேரும் உயிரிழந்தனர்.

  • காத்தான்குடி நகர சபைத் தவிசாளருக்கு பகிரங்க சவால்!

    காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையில் கடந்த நான்காண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை நிரூபிக்க நான் தயார். எனது சவாலுக்கு முகங்கொடுக்க நீங்கள் தயாரா? என ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் பகிரங்க சவால் விடுத்து ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளார்.

  • “பாகிஸ்தானில் கிரிக்கட் மரணித்துவிடும்” வகார் யூனுஸ்

    – AF-80 லாஹூர்: சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு வராமல் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டிருந்தால், பாகிஸ்தானில் கிரிக்கெட் மரணித்துவிடும் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் எச்சரித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு முதல் சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட வருவதில்லை என்பது நினைவிருக்கலாம். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு எந்த அணியும் போகாமல் உள்ளன.

  • 23 வருட ஆசிய அணிகளின் சாதனையை நோக்கி இந்தியா…

    மெல்போன்: கடந்த 23 ஆண்டுகளாக ஆசிய அணிகள் தொடர்ந்து நடத்தி வரும் சாதனையை இந்தாண்டு இந்தியா நிறைவேற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கடந்த 1992ம் ஆண்டு முதல் ஏதாவது ஒரு ஆசிய அணி தெரிவு பெற்று வருகிறது.

  • தனது சகோதரி திருமணத்திற்கு போக முடியாமல் தவிக்கும் எலியட்

    ஓக்லாண்ட்: உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றதால், தனது சகோதரியின் திருமணத்திற்கு எலியட் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்த கிராண்ட் எலியட், தென்ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். தற்போது அவரது குடும்பம் நியூசிலாந்தில் குடியேறி விட்டது.

  • பசில் ராஜபக்ஷவை இலங்கைக்கு வரவழைக்க பொலிஸார் நடவடிக்கை

    கொழும்பு: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் அரச நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவரை நாட்டுக்கு அழைப்பதற்கான உத்தரவொன்றை நீதிமன்றத்திடம் பெறவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

  • நெசவு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

    இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் கொழும்பு: கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நெசவு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம் பெற்றது.

  • அவுஸ்திரேலியாவை அடித்து நொறுக்காவிட்டால் இவ்வளவு நாள் விளையாடியதில் அர்த்தமில்லை: கோஹ்லி

    சிட்னி: அவுஸ்திரேலியாவை அடித்து நொறுக்க இப்போ இல்லாவிட்டால் எப்போதான் முடியும் என்று தோள் தட்டியுள்ளார் விராட் கோஹ்லி. அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 2 டெஸ்ட்டுகளை இழந்து,  2 டெஸ்டுகளை சமன் செய்தது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த போட்டியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால், உலக கோப்பையில் இதுவரை ஆடிய 7 போட்டிகளிலும் இந்தியா வென்று அசத்தியுள்ளது.

  • புத்தளத்தை சேர்ந்த இர்ஷாத் றஹ்மத்துல்லா அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாம ஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்

    புத்தளம்: புத்தளத்தை சேர்ந்த இர்ஷாத் றஹ்மத்துல்லா அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாம ஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.சமய,சமூக,கலை,கலாச்சார,பொது விடயங்களில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு ஒன்றியம் கௌரவமளிக்கவுள்ளவர்களில் இவரும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  • “கடந்த காலத்தில் இலங்கைக்கு கிடைக்காமல் போன ஜீஎஸ்பி வரிச் சலுகையினை மீண்டும் இலங்கை பெற்றுக்கொள்ளும்”: அமைச்சர் றிஷாட்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: கடந்த காலத்தில் இலங்கைக்கு கிடைக்காமல் போன ஜீஎஸ்பி வரிச் சலுகையினை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்ளவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இந்த சலுகையினை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராயும் உயர் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகள் குழுவினர் நேற்று அமைச்சர் றிசாத் பதியுதீனை

  • தென்னாபிரிக்காவில் பிறந்த எலியொட், தென்னாபிரிக்காவை வீழ்த்தினார்!

    ஓக்லாண்ட்: உலகக் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில், நியுசிலாந்து அணிக்கு மிக இக்கட்டான தருணத்தில் 84 ஓட்டங்களை அடித்தார் அந்த அணியின் வீரர் கிராண்ட் எலியொட். தென்னாபிரிக்கா ஜொஹன்னஸ்பேர்க்கில் மருத்துவர் ஒருவருக்கு மகனாக பிறந்த எலியொட், நியுசிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திரம் கென் ரதர்போ ர்ட் அறிவுரையின் பேரில் மீண்டும் கடந்த 2001ஆம் ஆண்டு நியுசிலாந்தில் குடியேறினார்.

←Previous Page
1 … 482 483 484 485 486 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar