பிரான்ஸில் 150 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

planeபரிஸ்: பிரன்ஸில் அல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன் விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விமானத்தில் மொத்தம் 150 பேர் பயணித்ததாகத் தெரியவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டுசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிக்ஞை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.

plane

அந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் எனும் நம்பிக்கை குறைவாகவே உள்ளது என்று பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் தெரிவித்துள்ளார்.விமானம் விழுந்து நொறுங்கிய வேகத்தைப் பார்த்தால், விமானிக்கு மாற்று நடவடிக்கை எடுக்க நேரமே இருந்திருக்கவில்லை என்றும், ஏதோ ஒரு பேரழிவு நடந்திருக்கவேண்டும் என்பதையும் காட்டுவதாக பிபிசியின் போக்குவரத்து செய்தியாளர் கூறுகிறார்.

இறந்தவர்களில் பெரும்பாலோனோர் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி தேசத்தவர்கள். விமான விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த ஏங்கலா மெர்க்கல் தான் இந்த விபத்து நடந்த இடத்துக்கு புதன்கிழமை செல்லவிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

Published by

Leave a comment