40 வருட கனவு: இறுதியாட்டத்தில் நுழைந்தது நியுசிலாந்து

New Zealand v South Africa: Semi Final - 2015 ICC Cricket World Cup– AF 80

ஓக்லாந்த்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை நூலிழையில் வீழ்த்தி நியுசிலாந்து இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்துள்ளது.ஒரு பந்து மட்டுமே எஞ்சிய நிலையில், நியுசிலாந்தின் எலியட் சிக்சர் அடித்து தென்னாப்பிரிக்காவின் கனவுகளை தவிடுபொடியாக்கினார்.

முதலில் மட்டை பிடித்த தென்னாப்பிரிக்கா 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டம் மழையால் தடைபட 43 ஓவரில் 298 ரன்களை எடுக்க வேண்டும் என்ற இலக்கு டக்வொர்த் லூயிஸ் முறையில் நியுசிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

New Zealand v South Africa: Semi Final - 2015 ICC Cricket World Cup

கிராண்ட் எலியட் 84 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். துவக்க ஆட்டக்காரர் மெக்கெல்லம் அதிரடியாக 59 ரன்களைக் குவித்திருந்தார். 1992 முதல் உலகக் கோப்பைகளில் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு வந்து தோற்று வெளியேற நேர்ந்தது. மேலும் 1999 உலககக்கிண்ணப் போட்டியிலும் அரை இறுதியில் தென்னாபிரிக்கா தோல்வியைத் தழுவியிருந்தது. இன்றை மற்றுமொரு உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியிலும் இவ் அணி, பரிதாபகமாகத் தோல்வியைத் தழுவி வெளியேறுகிறது.

imran thahir

1975 இல் இருந்து இடம்பெறும் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இதுவரை நியுசிலாந்து 1975, 1979, 1992, 1999, 2007 மற்றும் 2011 ஆகிய 6 முறைகள் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகாமல் வெளியேறி இருந்தது. 40 வருட வரலாற்றைக் கொண்ட உலகக் கிண்ணப் போட்டியில் முதன் முதலாக நியுசிலாந்து இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி இருக்கின்றது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா அல்லது அவுஸ்திரேலியாவை மெல்போன் மைதானத்தில் நியுசிலாந்து சந்திக்கும்.

south africa

south africa

Published by

Leave a comment