அவுஸ்திரேலியாவை அடித்து நொறுக்காவிட்டால் இவ்வளவு நாள் விளையாடியதில் அர்த்தமில்லை: கோஹ்லி

kohliசிட்னி: அவுஸ்திரேலியாவை அடித்து நொறுக்க இப்போ இல்லாவிட்டால் எப்போதான் முடியும் என்று தோள் தட்டியுள்ளார் விராட் கோஹ்லி. அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 2 டெஸ்ட்டுகளை இழந்து,  2 டெஸ்டுகளை சமன் செய்தது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த போட்டியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால், உலக கோப்பையில் இதுவரை ஆடிய 7 போட்டிகளிலும் இந்தியா வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில், உலக கோப்பை அரையிறுதியில், சிட்னியில், நாளை அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்தியா. போட்டி குறித்து அவுஸ்திரேலிய வீரர்கள் மக்ஸ்வெல், ஸ்மித் போன்றோர் கருத்து தெரிவிக்கையில், இந்தியா அடைந்த தோல்வியை சுட்டிக் காட்டி கேலி செய்தனர்.அவுஸ்திரேலியர்களுக்கு பதிலடி தரும் விதமாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் செய்தி இணையதளம் ஒன்றுக்கு விராட் கோஹ்லி சிறப்பு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: இந்தியா உலக கோப்பையில் விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகிறது. அவுஸ்திரேலியாவை இப்போது அடிக்காவிட்டால் எப்போதுதான் அடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment