ஓக்லாண்ட்: உலகக் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில், நியுசிலாந்து அணிக்கு மிக இக்கட்டான தருணத்தில் 84 ஓட்டங்களை அடித்தார் அந்த அணியின் வீரர் கிராண்ட் எலியொட். தென்னாபிரிக்கா ஜொஹன்னஸ்பேர்க்கில் மருத்துவர் ஒருவருக்கு மகனாக பிறந்த எலியொட், நியுசிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திரம் கென் ரதர்போ ர்ட் அறிவுரையின் பேரில் மீண்டும் கடந்த 2001ஆம் ஆண்டு நியுசிலாந்தில் குடியேறினார்.
தென்னாபிரிக்க ‘ஏ’ அணியில் இடம் பிடித்திருந்த எலியொட், இந்திய ‘ஏ’ அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். கட ந்த 2008ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் எலியொட் களமிறங்கினார். அதே தொடரில் ஒருநாள் போட்டியிலும் நியுசிலாந்து அணிக்காக அவர் விளையாடத் தொடங்கினார்.
இதுவரை 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள எலியொட் 3ஆயிரத்து 856 ஓட்டங்களை அடித்துள்ளார்.SHM
எலியொட்டின் தந்தை நியுசிலாந்தின் வெல்லிங்டன் பகுதியைச் சேர்ந்தவர். ஜொஹன்னஸ்பேர்க்கில், பட்டப்படிப்பு படித்த எலியொட் இப்போது தென்னாபிரிக்க அணிக்கே வில்லனாக மாறியுள்ளார்.(SHM)
Published by

Leave a comment