ஓக்லாண்ட்: உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றதால், தனது சகோதரியின் திருமணத்திற்கு எலியட் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்த கிராண்ட் எலியட், தென்ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். தற்போது அவரது குடும்பம் நியூசிலாந்தில் குடியேறி விட்டது.
இந்நிலையில் எலியட்டின் சகோதரியின் திருமணம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. ஆனால் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி நடக்கும் மெல்போர்ன் மைதானத்திற்கு புறப்பட்டு விட்டது. இதனால் அவரால் தனது சகோதரியின் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை.
இது குறித்து எலியட் கூறுகையில், ”இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்ற காரணத்தினால் என்னால் எனது சகோதரியின் திருமணத்துக்கு செல்ல இயலவில்லை என்றும், நான் அவுஸ்திரேலியா புறப்படும் முன் எனது சகோதரியை நேரில் சந்தித்து வாழ்த்தினேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
Published by


Leave a comment