மெல்போன்: கடந்த 23 ஆண்டுகளாக ஆசிய அணிகள் தொடர்ந்து நடத்தி வரும் சாதனையை இந்தாண்டு இந்தியா நிறைவேற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கடந்த 1992ம் ஆண்டு முதல் ஏதாவது ஒரு ஆசிய அணி தெரிவு பெற்று வருகிறது.
1992ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை ஆசிய அணியான பாகிஸ்தானும், 1996ம் ஆண்டு இலங்கையும், 2011ம் ஆண்டு இந்தியாவும் கைப்பற்றின. இதன் பிறகு 1999–ம் ஆண்டு பாகிஸ்தான், 2003–ம் ஆண்டு இந்தியா, 2007–ம் ஆண்டு இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோற்று போனது.
இதேபோன்று இந்தியாவும் இந்த ஆண்டுக்கான இறுதிப் போட்டிக்குள் நுழையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே நாளை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நாளை மழை வாய்ப்பு குறைவு தான் என்றாலும், முந்தைய நாள் மழையால் பிட்ச்சின் தன்மை மாறக்கூடும் என தெரிகிறது.
Published by

Leave a comment