Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சாய்ந்தமருது விளையாட்டு மைதானத்தின் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை சாய்ந்தமருது பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை சாய்ந்தமருது பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது. இதற்கமைவாக விளையாட்டு மைதானத்தினை சுற்றி மரக்கன்றுகளை நடும் வேலையினை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் நேற்று (16) சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

  • “சிங்கள அமைப்புக்களும், பௌத்த துறவிகளும் படையெடுத்து முசலியில் உள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு வருவதானது எங்களுக்கு அழுத்கமையை ஞாபகப்படுத்துகிறது”

    – சிலாவத்துறையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா சிலாவத்துறை: வில்பத்து காட்டுப்பகுதிக்கும் முசலி பிரதேசத்தில் மீள்குடியேறிவரும் மக்களுக்கும் எதிராக சில சிங்கள ஊடகங்கள் மேற்கொண்டுவரும் விசமப்பிரசாரத்துக்கும் எவ்வித தொடர்புகளுமில்லையென்றும் இது கடந்த கால கடும் போக்கு அமைப்புக்களின் செயற்பாட்டின் மற்றுமொரு வெளிப்பாடாகும் என்றும் முசலி பிரதேச மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • யாழ்ப்பாண கலாசாரத்திற்கு என்ன நடந்தது?

    கொழும்பு: யாழ்ப்பாண கலாசாரத்திற்கு என்ன நடந்தது? எனும் இதே தலைப்பில் ஐந்து வருடங்களுக்கு முன்னதாகவும் அதாவது இறுதி யுத்தம் முடிவடைந்து சரியாக ஒரு வருடத்தின் பின்னரும். அதன் பின்னர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவும் இரண்டு ஆசிரியர் தலையங்கள் எழுதப்பட்டு இன்று அதே தலைப்பில் இன்னுமொரு தலையங்கத்தை எழுதும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

  • பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட ஆறாமாண்டு நினைவு 19ம் திகதி

    கொழும்பு: நாட்டில் பிரிவினை வாதம் தோற்கடிக்கப்பட்ட ஆறாண்டு நினைவு தினம் நாளை மறுதினம் 19ஆம் திகதி மாத்தறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுகிறது. இவ்வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் முப்படைத்தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், இராஜதந்திரிகள் முதலானோர் பங்குபற்றுகின்றனர்.

  • வில்பத்து சர்ச்சையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பும்

    – முசலியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா  மன்னார்: மன்னார் மாவட்டத்தின் வில்பத்து சரணாயலயத்துக்குள் அமைச்சர் றிசாத் பதியுதீன் முஸ்லிம்களை குடியேற்றுவதாக ஊடகங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் வகையில் கொழும்பிலிருந்து ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்கள் நேற்று 16-05-2015 இங்கு வருகைத்தந்திருந்தனர்.

  • நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவின் பேச்சிலிருந்து வெளியான அந்த மூன்று உண்மைகள்

    1. ‘காத்தான்குடி பிரதான வீதி அபிவிருத்தியின்போது நான் எதிர்நோக்கிய சவால்கள் ஏராளம். முன்னாள் நகர பிதா முபீன், பிரதான வீதி அபிவிருத்திக்குத் தடையாக இருந்தபோது நான் அவரை எனது அறைக்கு அழைத்து வீதி அபிவிருத்திக்கான சம்மதக்கடிதம் தராவிட்டால் உடம்பில் கழுத்திருக்காது என்று பயமுறுத்தி அச்சுறுத்தியதன் காரணமாகவே அவர் பிரதான வீதி அபிவிருத்திக்கான அனுமதிக் கடித்தத்தைத் தந்தார்.’

  • கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழில் தேசியகீதம்: உத்தியோகத்தர் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்

    மட்டக்களப்பு: வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள மாணவர்கள் பலர் அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். விதாதாவள நிலையமும் செங்கலடி பிரதேச செயலகமும் இணைந்து கடந்த மூன்று தினங்களாக கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் இந்த கண்காட்சியை நடாத்திவருகின்றறது.

  • எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மோர்ஸிக்கு மரண தண்டனை

    கெய்ரோ: எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மோர்ஸிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பெருமளவிலான கைதிகள் சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மொஹமட் மோர்ஸி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

  • சவுதி செல்லும் பணிப் பெண்களின் ஊதியம் உயர வேண்டும்

    கொழும்பு: இலங்கையிலிலுந்து சவுதி அரேபியாவில் தொழில் புரியும் பெண்களுக்கு ஆகக்குறைந்த சம்பளமாக ரூபா 60 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள கூறுகின்றார். இலங்கையிலுள்ள அந்நாட்டு தூதுவராலயத்துடன் ஏற்கனவே நடத்தியுள்ள பேச்சுவார்தையின் பேரில் இது தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று வருகை தரவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

  • காத்தான்குடி நகர சபையின் ஐம்பெரும் எழுச்சி விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான், எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் ஐம்பெரும் எழுச்சி விழா 15-05-2015 நேற்று சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இம் ஐம்பெரும் எழுச்சி விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ மற்றும் விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி

  • ஹிஸ்புல்லாவின் விமர்சனங்களுக்கு புவி றஹ்மதுழ்ழாஹ்வின் சாட்டையடி!

    காத்தான்குடி: உருவச் சிலைக்கும், உருவப்படத்திற்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் கலைமானிப் பட்டம் பெற்றுக் கொண்டதாகக்கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எம்மைப்பற்றி விமர்சித்திருப்பது அவரது அறிவியல் சூனியத்தை அம்பலப்படுத்தியுள்ளது என ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழுவின் பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  • ‘காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்’: ஹிஸ்புல்லாஹ் MP ஆற்றிய முழுமையான உரை –ஓடியோ

    காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் 15-05-2015 வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பொது மக்களுக்காக இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் ‘காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்’ தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

←Previous Page
1 … 434 435 436 437 438 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar