சாய்ந்தமருது விளையாட்டு மைதானத்தின் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை சாய்ந்தமருது பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது

sainthamaruthu– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை சாய்ந்தமருது பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது. இதற்கமைவாக விளையாட்டு மைதானத்தினை சுற்றி மரக்கன்றுகளை நடும் வேலையினை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் நேற்று (16) சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது விளையாட்டுக் கழகங்களின் தலைவர் நில அளவையாளர் எம்.ஏ. றபீக், அதன் பெருளாளர் ஏ.எல்.ஆப்தீன், சாய்ந்தமருது பிரதேச செயலக நிதி உதவியாளர் ஏ.சீ.முஹம்மட், பிரதம இலிகிதர் ஏ.சீ.எம்.பழீல், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.வீ.எம்.றஜாய், இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.ஏ.ஏ.அஸ்வத் அலி, சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஏ.எம்.சஹான் உள்ளிட்ட இளைஞர் கழக பிரதிநிதிகள் என பலரும் கலங்து கொண்டனர்.

sainthamaruthu

சாய்ந்தமருது விளையாட்டு மைதானம் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமின் வழிகாட்டலில் விளையாட்டுக் கழக சம்மேளனத்தின் நேரடிக் கண்காணிப்பில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment