சங்கக்காரவுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான சியட் விருது

Kumar-Sangakkara-007மும்பை: இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான சியட் விருதை வென்றுள்ளார். அதே போன்று இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் சிறந்த சர்வதேச பந்து வீச்சாளராக விருது வென்றார். 2014-15-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான சியட் விருது வழங்கும் விழா மும்பையில் திங்களன்று நடைபெற்றது.

இதில் 2014-15 ஆண்டில் சர்வதேச போட்டிகளில் காட்டிய திறமை அடிப்படையிலேயே சங்கக்காரவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இருபது-20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கு பங்காற்றிய சங்கக்கார இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான டெஸ்ட் தொடர்களை வெல்லவும் உதவினார். கடந்த உலகக் கிண்ண போட்டியில் சங்கக்கார தொடர்ச்சியாக நான்கு சதங்களை அடித்து புதிய சாதனை படைத்திருந்தார்.

இதற்கு முன்னர் சனத் ஜயசூரிய, முத்தையா முரளிதரன் (மூன்று முறை), மஹேல ஜயவர்தன ஆகிய இலங்கை வீரர்கள் இந்த விருதை வென்றுள்ளனர். இலங்கை டெஸ்ட் அணியில் சிறப்பாக செயற்பட்டு வரும் ரங்கன ஹேரத் சிறந்த சர்வதேச பந்துவீச்சாளராக விருது வென்றார். தென்னாபிரிக்க டெஸ்ட் அணித்தலைவர் அம்லா சிறந்த துடுப்பாட்ட வீரராக விருதை தட்டிச் சென்றார்.

Published by

Leave a comment