புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் பலி!

train battiஏறாவூர்: மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவுநேர கடுகதி புகையிரதத்தில் மாவடிவேம்பு  பிரதேசத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவன் உயிரிந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். 
 

விமானப்படையில் தொழில் புரியும் மாவடிவேம்பு  பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய செல்வம் மகேந்திராஜா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். 
 
நேற்று செவ்வாக்கிழமை இரவு சுமார் 8.30க்கும் 9.00 மணிக்கம் இடைப்பட்ட நேரப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கின்றனர். 
 
புகையிரத்தில் மோதுண்டு உயிரிழந்த இளைஞனின் சடலத்தை புகையிரதம் மூலம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  ஏறாவூரப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Published by

Leave a comment