காத்தான்குடி ஊர் வீதி அபிவிருத்திக் கனவும் கலைந்துவிடுமோ?

old road (2)– எம்.எச்.எம். அன்வர்

கத்தான்குடி: காத்தான்குடி ஊர்வீதி அபிவிருத்தி இடம்பெறுகிறது. பழைய கல்முனை வீதி என அழைக்கப்படும் ஊர் வீதி அபிவிருத்தியானது ஆரையம்பதியிலிருந்து 600 மீட்டரும் மஞ்சந்தொடுவாயிலிருந்து 600 மீட்டரும் வடிகான்களுடன் கூடிய வீதியாக தற்போது புனரமைப்பச்செய்யப்படுகிறது. இவ்வீதி விஸ்தரிப்பின் நடுப்பகுதி எப்போது புணரமைப்புச்செய்யப்படும் என அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர். இதில் பலர் வீடுகளையும் மதில்களையும் உடைத்தும் விட்டனர்.

ஊர் வீதி மில்லத் மகளிர் வித்தியாலய சந்தியானது போக்குவரத்திற்கு மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக்கின் முயற்சியால் அவ்வீதிக்கு தார் இடப்பட்டு சென்ற வாரம் புணரமைப்பச்செய்யப்பட்டதை காணமுடிந்தது.

இதன்போது அவரை சந்தித்து ஊர்வீதி அபிவிருத்தி சம்பந்தமாக விணவியபோது,

old road (2)
காத்தான்குடி ஊர் வீதி அபிவிருத்திக் கனவும் கலைந்துவிடுமோ?

இந்த நடுத்துண்டு வீதிக்கான கோட்டா இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் நீண்ட காலம் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

old road
பலர் வீடுகளையும் மதில்களையும் உடைத்தும் விட்டனர்.

எது எவ்வாறு இருப்பினும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவின் முயற்சியிலேயே இவ்வீதி புணரமைப்பச் செய்யப்படுகின்ற அதே வேளை பிரதான பாதையாக காணப்படும் இவ்வீதியை முழுமையான வீதியாக புணரமைப்புச்செய்து போக்குவரத்துக்கு வசதியேற்படுத்தி தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Published by

Leave a comment