இணங்க மறுத்த 20 வயது பெண்ணை எரித்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்

is– AF-90

பக்தாத்: அளவுக்கு அதிகமாக உடலுறவு வைத்துக்கொள்ள மறுத்த 20 வயது பெண்ணை ஐஎஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி அவர்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். 9 வயது சிறுமியைக் கூட பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு கொடூர மனம் படைத்தவர்களாக உள்ளனர் தீவிரவாதிகள்.

இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாங்கள் கடத்தும் பெண்களுக்கு இழைக்கும் கொடுமை பற்றி தெரிய வந்துள்ளது.

தீவிரவாதிகள் தாங்கள் கடத்தும் பெண்களில் கன்னித்தன்மையுடன் இருக்கும் அழகிகளை சிரியாவில் உள்ள ரக்கா நகரில் செயல்படும் அடிமை சந்தையில் செக்ஸ் அடிமைகளாக விற்றுவிடுகிறார்கள்.

is

செக்ஸ் அடிமைகளாக விற்கப்படுவதற்கு முன்பு அந்த பெண்களை நிர்வாணமாக்கி அவர்கள் கன்னித்தன்மையுடன் தான் உள்ளார்களா என்று சோதனை செய்கிறார்கள் தீவிரவாதிகள். அந்த சோதனைக்கு பிறகு அவர்களை நிர்வாணமாகவே சந்தையில் விற்கிறார்கள்.

அளவுக்கு அதிகமாக உடலுறவு வைத்துக் கொள்ள மறுத்த 20 வயது பெண்ணை தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் பெண்களை செக்ஸ் அடிமைகளாக வைத்திருப்பதுடன் அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்திலும் ஈடுபடுத்துகிறார்கள்.

isis

செக்ஸ் சந்தையில் விற்கப்படும் பெண்களை வாங்குபவர்கள் அவர்களுக்கு அலுக்கும் வரை அனுபவித்துவிட்டு அவர்களை வேறு யாருக்காவது விற்றுவிடுகிறார்கள். இது போன்று ஒரு பெண் 22 முறை விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Published by

Leave a comment