ஈராக் சந்தையில் பயங்கரக் குண்டுத் தாக்குதல்: 60 பேர் உடல் சிதறி மரணம்!

  • AF-90

iraqபக்தாத்: ஈராக்கில் மக்கள் கூட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 60 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் 200க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. .ஈராக்கின் வடமேற்கு பகுதியிலுள்ள ஷியைட் மாகாணத்திலுள்ளது சட்ர் சிட்டி. நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து மிக நெருக்கத்திலுள்ள நகரம் இது.

இந்நகரிலுள்ள காய்கறி மார்க்கெட் சுற்றுவட்டாரத்தில் பிரபலமானது. எனவே அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இன்று காலையும்இ காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொறி திடீரென பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியது.

iraq

லொறி முழுவதும் வெடிகுண்டுகளை நிரப்ப செய்து தீவிரவாதிகள் அதை வெடிக்க செய்ததாக தெரிகிறது. இந்த தாக்குதலில், மார்க்கெட்டில் இருந்த சுமார் 60 அப்பாவி மக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Published by

Leave a comment