காத்தான்குடி: இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் மற்றுமொரு பிரச்சாரக் கூட்டம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் அதன் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களை ஆதரித்து நேற்று இடம்பெற்றது.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்திற்கு NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர் MACM.ஜவாஹிர் ஆசிரியர் தலைமைதாங்கினார்.
இதன்போது NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் பழுலுல் ஹக், அதன் கொள்கை பரப்புச் செயலாளர் சகோ, சிராஜ் மஷ்ஹூர், SLMCயின் கொள்கை பரப்புச் செயலாளர் ULMN.முபீன் உள்ளிட்ட பலர் உரையாற்றியதுடன் முன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் AGM.ஹாறூன், NFGGயின் பிராந்திய செயற்குழு உறுப்பினர்களான MYM.ஷரீப், MACM.முஹ்ஸின், MACM.முனவ்வர், முஹம்மத் பாயிஸ் உட்பட பெருந்தொகையான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
Published by



Leave a comment