ஆட்சியைப் பிடிக்க சீனாவிடம் பணம் கேட்கும் மகிந்த! மக்களே எச்சரிக்கை!!

mahindaகொழும்பு: எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஐதேக மற்றும் ஐமசுமு இடையேயான நேருக்குநேர் மோதலில், தனது முன்னணிக்கு தேவையான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள ஐதேகவில் தெரிவாகும் உறுப்பினர்களை பணத்திற்கு கொள்வனவு செய்ய மஹிந்த ராஜபக்ச தனது சிரேஸ்ட இராஜதந்திரிகள் ஊடாக சீன அரசாங்கத்திடம் பணம் கேட்டுள்ளார்.

ஒரு உறுப்பினருக்கு 200 மில்லியன் என்று கணக்கிட்டுள்ள மஹிந்த, அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கையை காட்டி அதற்கான பணத்தைப் பெற்றுத் தருமாறு சீனாவிடம் கேட்டுள்ளார். ஆனால் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு குறைந்தது 500 மில்லியன் கொடுக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ச தரப்பு சீனாவிடம் கூறியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் 100 நாட்களில் சீனாவின் போர்ட் சிட்டி உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டதால் பில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு சீன அரசாங்கத்திடம் இருந்து சதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் சீனாவின் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்டுள்ள 8% வீழ்ச்சி, டொலருக்கு ஏற்ற யுவான் பெறுமதி குறைவு போன்ற பிரச்சினைகளால் சீனாவின் பொருளாதார தளம்பல் நிலையில் உள்ளது.

mahinda

ஆனால் மீண்டும் மஹிந்த ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்த வழியேற்படுமாயின் அதற்கென முதலீடு செய்ய சீன அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்காது என சிரேஸ்ட இராஜதந்திரி குறிப்பிட்டார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சீன கம்யூனிச கட்சியின் சிரேஸ்ட தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உத்தியோகபூர்வமாகவும் மஹிந்த ராஜபக்சவை உத்தியோகபற்றற்ற வகையிலும் சந்தித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment